பதிவர்சந்திப்பில் பச்சைக்குதிரை தாண்டிய பதிவர்!

>> Monday, August 27, 2012



டிஸ்கி : நான் பதிவர் சந்திப்புக்கு போகலைங்கறது எல்லாருக்கும் தெரியும்..! சில காரணங்களுக்காக நான் போகமுடியாத சூழல் ஏற்பட்டாலும் எனக்கு ரன்னிங் கமெண்ட்ரியா ஒரு பிரபல பதிவர் கம் அலக்ஸா ரேங் கம் பிகாஸோ என ரவுண்டு கட்டியடிக்கும் நாய்-நக்ஸ் எனக்கு அவருடைய வாக்கி டாக்-கி யில் சொல்லிக் கொண்டே வந்தார் அது............



நான் இப்போ இரயில்வே ஸ்டேசன்ல இருக்கிறேன் டிக்கட் வாங்கப் போறேன் அங்கே நடந்த சம்பாஷனைகள்



''சென்னைக்கு முதல் வகுப்பு இருக்கா..?''

''இல்லை…!''

''இரண்டாம் வகுப்பு இருக்கா…?''

''இல்லை..!''

''வித்தவுட் இருக்கா…?''

''ஙே…''

''சரி…!சரி….!முறைக்காதே அன் ரிசர்வ் ஒன்னு கொடு…!''

டிக்கெட்டை வாங்கிக் கொண்டு மீண்டும் வெளியே வந்து சில்லுன்னு ஒரு ''பீர்'' அடித்துக்கொண்டு நாலு மசாலா தோசைய சாப்பிட்டு வண்டிக்கு வந்தேன், வண்டி கிளம்பியது.

சென்னை வந்து ''எழும்பூர்'' இரயில் நிலையத்தில் இருந்து அண்ணன் ''ஆயிரத்தில் ஒருவன் மணி'' என்னைக் கூட்டிக்கிட்டு போனார், அண்ணே..! நீங்க ''எம்.ஜி.ஆர்'' மாதிரியே இருக்கீங்க என்றேன், இடுப்பில் வைத்திருந்த சாம்பார் கரண்டியால் ''பொய் சொன்னே போஜனம் கிடைக்காது...!'' என்று, மொடோர்…!மொடோர்…!என்று என் மண்டையில் வைத்தார், தலையை தடவி முடிக்கும் நேரத்தில் ஹோட்டல் ரோகினி வந்தது. ''ஏண்ணே…! இந்த ஹோட்டலா..? தாஜ்ல போடலையான்னேன்..?''  மறுபடியும் அவர் கை கரண்டிக்கு போக குண்ட்ரு..! குண்ட்ரு..! என்று ஹோட்டலுக்குள் ஓடிவிட்டேன்.

எனக்கான அறையில் ஈரோட்டு வக்கீல் நண்டுநொரண்டு இருந்தார்…! அவரிடம் போன் நெம்பர் வாங்கி அங்கியே போன் போட்டு பேசினேன். டென்சனான அவர் ''உன் மேல கேஸ் போட்டிடுவேன் ராஸ்கோல்'' என்றார்…ஹிஹி…! பழக்க தோசம் சார் என்றேன்.

ஆருர்மூனாவுக்கு போன் போட்டேன்….''என்னய்யா பதிவர் சந்திப்புன்னு போட்டாலே சைட்டிஸ்க்கு கருவாடு வறுத்துட்டு வர்ற ஆளுக நாங்க... நீ…சரக்கே கிடைக்கும்ன்னு போஸ்ட் போட்டுட்டு இன்னும் வரலை..!'' என்றேன் அதுக்கு அவர் ''நக்கீரர் இருய்யா வருகிறேன்'' என்றார்.

நாலு பாட்டில் பிசிலரி பாட்டிலோடு வந்தார் ஆருர்மூனா. எங்கியா சரக்கு என்றேன்..! ''யோவ் நக்கீரரே உம் சிவந்த கண்ணை நன்றாக திறந்து நன்றாக பாரும் அத்தனையும் பாகார்டியா ஒயிட் ரம்,''என்றார் இரண்டு அடி துள்ளிக் குதித்த நான் தீர்த்த சாந்தியில் இறங்கினேன். முடிந்த பிறகு அப்படியே தூங்கிவிட்டேன்.

நடிகை சரோஜாதேவி இரண்டு இன்ச் மேக்கப்போடு கோ…..பால்…….எழுந்திருங்கள்..!கோ………..பால் என்று கையில் வைத்திருந்த பன்னீர் குப்பியில் இருந்த பன்னீரை என் முகத்தில் தெளித்தார்…..இன்னுமொரு குவளையில் இருந்த சந்தனத்தை முகத்தில் பூச…….அடச்சே.....! அத்தனையும் கனவு! 

மெட்ராஸ் பவன் சிவா பாட்டில் தண்ணீரை முகத்தில் புளிச்….புளிக்சென்ற அடித்தபடி நக்கி மாமா…நக்கி மாமா எழுந்திரி நக்கி மாமா என்றார். கனவை கலச்சிட்டாங்களே அப்படின்னு சிரமப் பட்டுக்கிட்டே எழுந்து ரின் சோப்பு போட்டு குளித்து விட்டு பிளீச்சிங் பவுடர் போட்டுக் கொண்டு பதிவர் சந்திப்பு நடக்கும் மண்டபத்தை நோக்கி பொடி நடையாகப் போனேன்.

மண்டபத்தின் வாசலில் அஞ்சா சிங்கம் நின்று கொண்டு ரோட்டில் போகும் ஆட்களை எல்லாம் நிறுத்தி சார்….நீங்க வவ்வாலா….? சார் நீங்க வவ்வாலா…?என்று கேட்டுக் கொண்டிருந்தார்(வவ்வால் நோட்ஸ் திஸ் பாயிண்ட்) அவர்கள் டெரராகி நாங்க மனுசங்க..என்றபடி பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடினார்கள். என்னைக் கண்டதும் ''வாய்யா…..!வாய்யா….!தனியா உள்ள போக ஒரு மாதிரியா இருந்தது அதான் வவ்வால் அண்ணாச்சியா இருந்தா கம்பனிக்கு ஆள் சரியா இருக்குன்னு பார்த்தேன்….அவரு வரலை நீ வா…''என்றபடி உள்ளே அழைத்துச் சென்றார்.

மேடையில் என்னுடைய சிஸ்யர்கள் சிபி, கேபிள், ஜாக்கி உக்கார்ந்து ஒவ்வொரு பதிவராக அழைத்து அறிமுக உரையாற்ற உதவிக் கொண்டிருந்தார்கள்..! என் பெயரும் வந்தது, என்னை மிஸ்டுகால் நக்கீரன் என்று பெருமையாக கூறினார்கள், நான் மேடைக்கு சென்றபோது என் ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தில் கோபாலபுரத்தில் டுவிட்டுக் கொண்டிருந்த தலைவரே ஜெர்க் ஆனதாக உளவுத்துறை தெரிவிக்கின்றது.

மதுமதி எனக்கு சர்ச்சை பதிவு புகழ் ஆசிக்கை அறிமுகப் படுத்தினார் ''ஆள் பல்கா இருந்தார் நானும் கொஞ்சம் ஜெர்க்கானேன்..!'' ஆனாலும் கமல் மாதிரி கட்டிப்புடி வைத்தியம் செய்து இருவரும் நண்பேன்டா ஆயிட்டோம்...!

கேபிள் வந்து என்னை ஒரு கவிதை படிக்குமாரு அழைத்தார் வீனாக கொலைப்பழி விழும்மென்று தவிர்த்து விட்டேன்.மதியம் திவ்யமான சைவ உணவு. ஆனாலும் நமக்கு சைவம் சாப்பிட்டு பழக்கமில்லாததால்...! பாக்கெட்டில் வைத்திருந்த ''நெத்தலி கருவாடை'' சாம்பாரில் போட்டு நான் மட்டும் அசைவம் சாப்பிட்டேன் என இங்கே கூறிக் கொள்கிறேன். முடிந்தால் மெரினாபீச்சில் அண்ணா சமாதிக்கு பக்கத்தில் ஒரு கல்வெட்டில் பொறித்து வைக்கவும், வரலாறு தெரிந்து கொள்ளட்டும் என்று பிலாசபியிடம் கூறினேன்! சங்ககால இலக்கிய வார்த்தையொன்றை என்னை புகழ்ந்து கூறினார்.(கருவாடு கொடுக்கலைன்னு பொறாமை)

மயிலன் கவிதை வாசித்தார் கவிதை அனைவரையும் கவர்ந்தது, நான் போய். அவரை டாக்டர் பேசிட்டு மட்டும் வந்துட்டிங்க கவிதை எங்க? என கலாய்த்தேன்..!அவர் பத்து ரூபாய் எடுத்து கீழே போட்டார், நான் எதார்த்தமாக குனிந்து எடுக்க, என்னை பச்சகுதிரை தாண்டி விட்டு ஓடிவிட்டார். சரி பத்து ரூபாய் மிச்சம் என்று வைத்துக் கொண்டேன், பிறகுதான் தெரிந்தது அது செல்லாத நோட்டு என்று வடை போச்சே..! என்று நானே சொல்லிக் கொண்டேன். அடுத்தது கேபிள் கவிதை வாசிப்பதாக சொன்னார்கள், எனக்கு தலை கிர்ர்ர்ர்ர்ர்ரென்று சுற்ற, மணமகன் அறையில் போய் படுத்துக் கொண்டேன், நான் போதையில் படுத்திருப்பதாக புரளியை கிளப்பி விட்டார்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகர் உரையாற்றினார். தனிமனித தாக்குதல் கூடாது என்றார், நல்ல விசயம், அவரிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கிவிட்டு…சார் உங்க கதையில் வருகிற நந்தகுமாரன் கூழாங்கல்லுல இருந்து மின்சாரம் கண்டுபிடிச்சா சொல்லுங்க சார்….! எங்க ஊர்ல கரண்டு அடிக்கடி போயிடுது என்றேன். சொல்றேன்….!சொல்றேன்….!என்றபடி போய் விட்டார். அவரிடம் யாரோ என்னைப் பத்தி சொல்லிட்டாங்க போல, போன் நெம்பர் கொடுக்காம போயிட்டார்.

இவையாவும் கற்பனையே...!


60 comments:

Unknown 7:43:00 PM  

கடைசி லைன் தான் சார் டாப்பு...

பட்டிகாட்டான் Jey 7:51:00 PM  

நன்றி வணக்கம். நான் நக்ஸ்-சுக்கு சொன்னேன். நக்ஸ் இது 2 வாட்டீ சொல்லிருக்கேன்...( இதுக்காகவாவது மிஸ்டு கால குடுக்காத... :) )

சுரேசுக்கு - நல்லா நகைச்சுவயா எழுதிருக்கே .

Avargal Unmaigal 7:59:00 PM  

இவையாவும் கற்பனையே...! சில நேரங்களில் கற்பனை கூட மிக அருமையாக இருக்கிறது

உணவு உலகம் 8:13:00 PM  

நல்லா கலாய்க்கிறீங்கப்பா.

உணவு உலகம் 8:14:00 PM  

அதெப்படிங்க, நக்ஸின் ஒவ்வொரு அசைவையும் அவவளவு துல்லியமா எழுதியிருக்கீங்க!

திண்டுக்கல் தனபாலன் 8:25:00 PM  

கலக்கல் கற்பனை...

நீங்களும் வந்திருக்கலாமே சார்...

நன்றி… (த.ம. 4)

Cable சங்கர் 8:26:00 PM  

athepadi நிஜத்தை எல்லாம் கற்பனைன்னு சொல்றீங்க?:)

கோவை நேரம் 8:34:00 PM  

யோவ் மாம்ஸ்...கற்பனை அப்படின்னு சொல்லிட்டு நிஜத்தை சொல்லிட்டியே..

நாய் நக்ஸ் 8:41:00 PM  

Nalla...irukku
karpanai.....
Thodaravum....

Tm....no....nahi...illai...

:)

CS. Mohan Kumar 9:21:00 PM  

செமையாக ரசித்து சிரித்து படித்தேன்

சுரேஷ்: நீங்கள் வருவீர்கள் என உறுதியா நினைச்சேன். சென்ற முறை ஈரோடு பதிவர் சந்திப்புக்கு வந்தபோது உங்களிடம் பேசவில்லை. சென்னை வரும்போது சொல்லுங்கள் சந்திப்போம்

நான் வரவேற்புரை பேசும் முன் மைக் சதி செய்ய, அந்த டென்ஷனில் உள்ள குழப்பத்தில் மதுமதி என்னை " வீடு சுரேஷ் " அவர்கள் வரவேற்புரை பேசுவார் என்றார். இவ்வாறாக நீங்களும் விழாவில் இடம் பெற்று விட்டீர்கள் :))

Philosophy Prabhakaran 9:24:00 PM  

இதுல பாதி சமாச்சாரம் உண்மை தான்...

நக்ஸை வெறுப்பேற்றுவது எவ்வளவு அலாதியான சுகம் தெரியுமோ...?

ரயிலில் வந்துக்கொண்டிருக்கும்போது லேப்டாப் இல்லாததால் தவித்துக்கொண்டிருந்தார் நக்ஸ்... மேலும் இரவு எட்டு மணி ஆகியும் சரக்கு கிடைக்கப்பெறாத நக்ஸ் அஞ்சாசிங்கம், ஆரூர் மூனா, சிவகுமார் என்று யாருக்கு போன் போட்டாலும் நானே எடுத்து கலாய்த்துக்கொண்டிருந்தேன்...

வெளங்காதவன்™ 9:25:00 PM  

நன்றி!!!

#தும்மல் தும்மலா வருதுயா....

Unknown 9:48:00 PM  

@விக்கியுலகம்கடைசி லைன் தான் சார் டாப்பு...
///////////////////
பட்டவிங்களுக்கு தானே தெரியும் வலி..!!!ஹிஹி! நன்றி மாம்ஸ்!

Unknown 9:50:00 PM  

@பட்டிகாட்டான் Jey
நன்றி வணக்கம். நான் நக்ஸ்-சுக்கு சொன்னேன். நக்ஸ் இது 2 வாட்டீ சொல்லிருக்கேன்...( இதுக்காகவாவது மிஸ்டு கால குடுக்காத... :) )

சுரேசுக்கு - நல்லா நகைச்சுவயா எழுதிருக்கே .
////////////////////
இதுக்கும் மிஸ்டுகால் கொடுத்தார்...நக்ஸ்!

நன்றி பங்காளி!

Unknown 9:50:00 PM  

@Avargal Unmaigal
இவையாவும் கற்பனையே...! சில நேரங்களில் கற்பனை கூட மிக அருமையாக இருக்கிறது
////////////////////////
மிக்க நன்றி சார்!

கலாகுமரன் 9:51:00 PM  

எனக்கு உடம்பு பூரா மண்ணு உருண்டு புரண்டு சிரிச்சதில...

Unknown 9:52:00 PM  

@FOOD NELLAI
நல்லா கலாய்க்கிறீங்கப்பா.
///////////////////
நம்ம நக்ஸ்தானே சார்! ஹிஹி!
:)

அதெப்படிங்க, நக்ஸின் ஒவ்வொரு அசைவையும் அவவளவு துல்லியமா எழுதியிருக்கீங்க!
/////////////////////
இங்க போனை போட்டது சென்னை போய்த்தானே வச்சாரு..!
நன்றி சார்!

Unknown 9:53:00 PM  

@திண்டுக்கல் தனபாலன்கலக்கல் கற்பனை...

நீங்களும் வந்திருக்கலாமே சார்...
///////////////////////
எதிர்பாராத பிரச்சனை வரஇயலவி்ல்லை சார்! திண்டுகல் வந்தால் சந்திப்போம் சார்!

நன்றிகள் சார்!

Unknown 9:55:00 PM  

@Cable சங்கர்athepadi நிஜத்தை எல்லாம் கற்பனைன்னு சொல்றீங்க?:)
///////////////////////
சில நேரங்களில் அப்படிச் சொல்ல வேண்டியதாகிப் போகின்றது கேபிள்ஜி!

நன்றி சார்!

Unknown 9:55:00 PM  

@கோவை நேரம்யோவ் மாம்ஸ்...கற்பனை அப்படின்னு சொல்லிட்டு நிஜத்தை சொல்லிட்டியே..
///////////////////////////
ஆமாம் மாப்ள என் கனவு பலிச்சிருச்சோ...!

Unknown 9:58:00 PM  

@நாய் நக்ஸ் -இலையையும் தின்பவன்
Nalla...irukku
karpanai.....
Thodaravum....

Tm....no....nahi...illai...

:)
///////////////////////
மன்னிக்கவும் நண்பரே...!எனக்கு ஹிந்தி தெரியாது தமிழில் கருத்திடவும்...!

இலையையும் தின்பவன்/////////

இனி ஆடு-நக்ஸ் என்று அழைக்கப்படுவாராக.....பார்த்தியா பிரியாணி போட்டிறப் போறாங்க...!

Unknown 10:00:00 PM  

@மோகன் குமார்செமையாக ரசித்து சிரித்து படித்தேன்

சுரேஷ்: நீங்கள் வருவீர்கள் என உறுதியா நினைச்சேன். சென்ற முறை ஈரோடு பதிவர் சந்திப்புக்கு வந்தபோது உங்களிடம் பேசவில்லை. சென்னை வரும்போது சொல்லுங்கள் சந்திப்போம்

நான் வரவேற்புரை பேசும் முன் மைக் சதி செய்ய, அந்த டென்ஷனில் உள்ள குழப்பத்தில் மதுமதி என்னை " வீடு சுரேஷ் " அவர்கள் வரவேற்புரை பேசுவார் என்றார். இவ்வாறாக நீங்களும் விழாவில் இடம் பெற்று விட்டீர்கள் :))
/////////////////////////
எதிர்பாராத சூழல் என்னை வரமுடியாமல் செய்து விட்டது...!சென்னை வரும்போது சந்திப்போம் சார்!

நன்றி சார்!

Unknown 10:02:00 PM  

@Philosophy Prabhakaranஇதுல பாதி சமாச்சாரம் உண்மை தான்...

நக்ஸை வெறுப்பேற்றுவது எவ்வளவு அலாதியான சுகம் தெரியுமோ...?

ரயிலில் வந்துக்கொண்டிருக்கும்போது லேப்டாப் இல்லாததால் தவித்துக்கொண்டிருந்தார் நக்ஸ்... மேலும் இரவு எட்டு மணி ஆகியும் சரக்கு கிடைக்கப்பெறாத நக்ஸ் அஞ்சாசிங்கம், ஆரூர் மூனா, சிவகுமார் என்று யாருக்கு போன் போட்டாலும் நானே எடுத்து கலாய்த்துக்கொண்டிருந்தேன்...
///////////////////////////////////////
நான் இதோ கிளம்பிட்டேன் கிளம்பிட்டேன்....!என்று காலாய்த்துக் கொண்டிருந்தேன்..!எம் மேல செம கடுப்புல இருக்கிறார் மனுசன்..!
:)))

Unknown 10:03:00 PM  

@வெளங்காதவன்™நன்றி!!!

#தும்மல் தும்மலா வருதுயா....
/////////////////////
விக்ஸ் கலந்து அடிக்கவும் நெடியில் ரெடி!

பங்கு நன்றி!

Unknown 10:04:00 PM  

@கலாகுமரன்எனக்கு உடம்பு பூரா மண்ணு உருண்டு புரண்டு சிரிச்சதில...
///////////////////////

நன்றி கலாகுமரன்...!

அருள் 10:23:00 PM  

பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

"மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?"

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

வவ்வால் 10:31:00 PM  

வீடுஜி,

பதிவர் சந்திப்பில் பச்சைக்குதிரை என்னும் வரலாற்று காவியத்தில் அடியேனது பெயரையும் சேர்த்து, வரலாற்றில் இடம் பெற செய்துவிட்டீர்கள்...


அருமை...அருமை!

வீடுஜி கற்பனையோ,காவியமோ, உங்கள் கை வரைந்த ஓவியமோ... எத்தனை எத்தனை மக்கள் படிக்கிறார்களய்யா ,பல்சுவையில் பின்னூட்டம் போடுறங்கய்யா...என ஒரு கவித பாட தோனுதய்யா :-))


ஊருல ஆள் ஆளுக்கு 1000க்கணக்கில போட்டுவுக்கு போஸ் கொடுத்து வாங்காத பெருமையை இந்த நக்ஸ் அண்ணே ஒரே போட்டோவில தூங்கியே வாங்கிட்டாரப்பா :-))


இதைத்தான் படுத்துக்கிட்டே ஜெயிக்கிறதுன்னு பெரியவங்க சொன்னாங்களா ?

(யாராவது கொலை வெறில "வவ்வால" கொத்துபரோட்டா போடணும்னு தேடினாங்களா என்பதை ரகசியமாக சொல்லவும்)

CS. Mohan Kumar 10:51:00 PM  

எத்தனையோ பேரை எனது பதிவுகள் மகிழ்வித்தாலும் ஒரே ஒரு திருந்தாத ஜென்மம் தொடர்ந்து வெவ்வேறு விதமாய் வெவ்வேறு இடங்களில் என் மீதான கோபத்தை காட்டி கொண்டிருக்கிறது. ஆயிரம் பேருக்கு நல்லவனாய் இருப்பதே கஷ்டம் நான் அப்படி தான் இருக்கிறேன் ! அதுவே போதும் ! உலகில் உள்ள அனைவரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை !

நான் போஸ் கொடுக்கும் ஆயிரம் படங்கள் எனது பதிவில் இனியும் வெளிவரும். யார் வந்து பார்க்க சொன்னா? யார் பொறாமைப்பட்டு பொலம்ப சொன்னா?

நண்பர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். முதலில் பின்னூட்டத்தில் புகழ்ச்சி அப்புறம் தான் தனி மனித தாக்குதல் செய்யப்படுகிறது என்பது எனது அனுபவம். இதற்கு மேலும் ஊக்குவித்தால் நான் பட்ட மாதிரி மன வேதனை பட்டு தான் நீங்கள் மாறுவீர்கள் என்றால் உங்கள் விருப்பம் ! இது நாய் நக்சுக்கும் சொல்ல நினைத்தேன் இங்கேயே சொல்லிடுறேன் !

CS. Mohan Kumar 11:17:00 PM  

எனது ப்ளாகில் இவரால் ஒரு பிரச்சனை வந்த பின், சென்னையில் உள்ள வயதான ஒரு பெண் பதிவர் போன் செய்து பேசினார். இந்நபரின் பின்னூட்டத்தால் பிரச்சனை வந்த, எழுதுவதையே விட்ட சிலர் பற்றி கூறினார். அவ்வளவு தொண்டு ஆறு ஏழு வருஷமாய் இவர் ஆற்றுகிறார் !

குறிப்பிட்ட நபரை என் ப்ளாக் பக்கமே வராதே என துரத்தி அடித்த காரணமே இது தான் ! நைசாய் ஒரு சண்டை ஆரம்பிக்க வேண்டியது ! அதை வைத்தே அடுத்த இரு நாளை ஓட்ட வேண்டியது ! இப்படி எப்பவும் நெகடிவ் மைன்ட் செட்டுடன் இருக்கும் ஆளின் காத்து கூட நம் மீது படக்கூடாது என நினைக்கிறேன் !

காலை பதிவு போட்டு விட்டு ஆபிஸ் வருகிறோம். எப்போதோ நடுவே கேப்பில் பின்னூட்டம் வந்திருக்கா என பார்க்கிறோம். இது போன்ற சண்டைகளால் அலுவலக வேலையில் மனம் செலுத்த முடியாமல் போகிறது. வாக்குவாதம் செய்வதே முழு நேர வேலையாய் நம்மால் கொள்ள முடியாது

விவாதமே கூடாது என்று நினைப்பவன் அல்ல நான் ! பல பதிவுகளில் என்னை திட்டி சிலர் எழுதியவை அப்படியே உள்ளது. அத்தகைய பின்னூட்டம் வேண்டாம் என நினைத்தால் எப்போதோ கமன்ட் மாடரேஷன் கொண்டு வந்திருப்பேன்
எனது ஒரு பதிவை வைத்து என்னை நேரில் பார்த்த மாதிரி தனிப்பட்ட என் குறைகளை ( !!??) அதி புத்திசாலி மாதிரி பேசுவது கடுப்பை கிளப்புகிறது !
இந்த பதிவு இனி சாக்கடை வசம் செல்லும் என்பதை அனுபவத்தின் மூலம் நன்கு அறிவேன். சாக்கடைக்குள் இறங்காமல் இருப்பதே நல்லது !

இந்திரா 11:53:00 PM  

கடைசில //இவையாவும் கற்பனையே...!//னு எஸ்கேப் ஆயிட்டீங்களே..
ஆனாலும் கலக்கல் பதிவு..

முத்தரசு 1:01:00 AM  

அப்பாலிக்கா
வாரேன்

சம்பத்குமார் 1:15:00 AM  

நக்ஸ் தொல்ல தாங்க முடியல சாமி....

முத்தரசு 1:46:00 AM  

அப்பாலிக்கா
வாரேன்

முத்தரசு 1:46:00 AM  

அப்பாலிக்கா
வாரேன்

அனுஷ்யா 2:29:00 AM  

யோவ் மாம்ஸ்.... நக்ஸ கலாயக்குற சாக்குல "நான் பேசிட்டு போயிட்டேன்" எனக்கு ரிவீட்டா? இதற்கு பதில் சொல்ல விரைவில் ஒரு எலக்கிய பதிவு வெளிவரும்...

நக்ஸ் மாமாவின் உயரத்தை பச்சை குதிரை தாண்டிடலாம்... ஆனா பரப்பளவை நான் தாண்டியதாக நீங்கள் சொல்லியிருப்பது ஏதோ ஃபிக்ஷன் போல உள்ளது... nice rib-tickler... enjoyed it thoroughly.....

@மோகன் குமார்.... அன்றே நீங்கள் இதை பற்றி என்னிடம் சொல்லி கொண்டு இருந்தீர்கள்... நீங்கள் கண்டு கொள்ளாமல் விடுவது நலம்...

ஜோதிஜி 3:30:00 AM  

சுரேஷ்

நூற்றுக்கு நூறு, நகைச்சுவையாக எழுதுவது மிகவும் சவாலானது. ரொம்ப அற்புதம். மறுபடியும் வந்து படிக்க வைக்க தூண்டிய எழுத்து நடை. குறிப்பாக வவ்வுஜி. க்ளாஸ்

ராஜ் 4:29:00 AM  

பாஸ்,
செம காமெடி...சும்மா சொல்ல கூடாது, பின்னிட்டீங்க.

”தளிர் சுரேஷ்” 5:03:00 AM  

பகிர்வு அருமை! நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
http://thalirssb.blogspot.in/2012/08/6.html
மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

விச்சு 5:06:00 AM  

கடைசி வரியும் கற்பனைதானே...

அஞ்சா சிங்கம் 5:30:00 AM  

வீடு வீடுகட்டி அடிக்குது .............சண்டை சப்புன்னு போயிடுச்சே .

MARI The Great 5:34:00 AM  

சம்பவங்கள் யாருடைய வாழ்கையிலாவது உண்மையில் நடந்திருந்தால் அது தற்செயலானதேன்னு ஒரு லைன் சேர்க்காம விட்டு புட்டீங்களே தல! :)

MARI The Great 1:43:00 PM  

தளம் திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது ஜீ, கவனிக்கவும்!

காட்டான் 2:49:00 PM  

கொய்யால.. உமக்கு நல்லாதான்யா நகைச்சுவை வருது..!

sakthi 8:28:00 PM  

சிரிக்காம ஜோக் ! அது உங்களால தான் முடியும்

வவ்வால் 9:19:00 AM  

அஞ்சா ஸிங்கம்,

//வீடு வீடுகட்டி அடிக்குது .............சண்டை சப்புன்னு போயிடுச்சே .//

ஏன் ...ஏன் இந்த கொலவெறி!!!

இப்போத்தான் ஒரு இடத்தில பார்த்தேன் நீர் சண்டைக்கு ஆள்ப்பிடிக்கிறீர்னு விளம்பரம் போட்டு இருக்காங்க,இங்கே வந்தா சண்டை சப்புனு போச்சேனு வருத்தப்படுறீர் ?


அப்புறம் தீவிரவாதின்னு பட்டம், கொடுத்துற போறாங்க உலகசமாதான தூதர்கள் :-))

கவலைப்படாதீர் என்னிக்கா இருந்தாலும் ஆடுன்னு இருந்தா பிரியாணி சட்டியில் வெந்து தான் ஆகணும், பிரியாணி போட்டுறலாம்!!!
--------------

பி.கு:

இந்தப்பதிவிலேயே ஒருத்தர் சண்டைக்கு அச்சாரம் போட்டு இருக்கார், பாவம் அவருக்கு நல்ல நேரம் தப்பிச்சார்... ஏன்பா சந்திப்புக்கு போனமா சந்தோஷமா இருந்தமான்னு இல்லாம என்னைப்பத்தி கதைவிட்டு ,புரளியைக்கிளப்பிக்கிட்டு, அதையும் ஒருத்தர் நம்ப்பி இருக்கார் போல , எல்லாம் சின்னப்புள்ளைங்களாவே இன்னும் இருக்காங்களே :-))

----------

CS. Mohan Kumar 7:35:00 PM  

நாராயணா : இந்த கொசு தொல்லை தாங்க முடியலை நாராயணா ! எங்கே போனாலும் நம்மளையே சுத்தி சுத்தி வருது !

நிற்க ஒரு முக்கிய விஷயம் பற்றிய முன்னறிவுப்பு இங்கு செய்கிறேன்

தன் பெயர் , மெயில் ஐ. டி, போன் இவை யாருக்கும் தெரியாது என்பதால் யாரையும் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படியும் காயப்படுத்தலாம் என இந்த நபர் செய்கிற இழி செயலை இனியும் பொறுக்க முடியாது.

பெயர் , மெயில் ஐ. டி, போன் தேவையே இல்லை; சைபர் கிரைமுக்கு இவரது ஐ. பி அட்ரஸ் போதும் !

போலிஸ் கேஸ்கள் டீல் செய்யும் என்னுடன் படித்த வழக்கறிஞர் நண்பரிடம் இவரது ஆறேழு வருட தனி மனித தாக்குதல் பற்றி சொன்னேன். அதில் குறிப்பாக இவர் சமீபத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்திய மத துவேஷ தாக்குதல் ஒன்றே போதும்; இவர் மீது கம்பிலேயின்ட் தந்து உள்ளே வைக்க என்றார். மேலும் அவர் தற்போது வட கிழக்கு மாநிலங்களில் நிகழ்ந்த பெரிய குழப்பத்துக்கு இது போன்ற முகம் தெரியாத அனானிகள் தான் காரணம் என்பதால் குழப்பம் விளைவிக்கும் இத்தகையவர்கள் மீது தற்போது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தனக்கு தெரிந்த சில உதாரணங்கள் காட்டி கூறினார் இவரது ஆறேழு வருட தவறை திருத்த இது தான் சமயம் !

நம்ம பதிவுலகிலே இதற்கு முன்னுதாரணம் நிறைய இருக்கு. ஒன்று மட்டும் சொல்றேன். போலி டோண்டு விவகாரம் !

இதனை இங்கு பகிர காரணம்: நாளை இந்த நடவடிக்கை எடுத்த பின் யாரும் " அந்த நபர் நிச்சயம் தவறு செய்தார்; ஆனால் அதுக்காக மோகன் குமார் ஏன் அவரை போலீசில் மாட்டி விடனும் "என வருந்த கூடாது என்று தான் !முதலிலேயே சொல்லிட்டு அப்பவும் திருந்தாட்டி அதை செய்வதை தவிர வேறு வழி இல்லை. I dont want to be unpredictable to the blog world friends and giving this as a precaution.

ஆறேழு வருடமா தொடர்ந்து நல்லவர்களை காயப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. பதிவுலகில் வக்கீல்களாக இருந்து கொண்டும் நான், ராஜசேகர் (நண்டு) போன்றோர் இவர் செய்யும் தனி மனித தாக்குதல்களையும், மத துவேஷத்தையும் அனுமதிக்க முடியாது !

இனி பின்னூட்டத்துக்கு பதில் பின்னூட்டமே கிடையாது. என்னை மட்டுமல்ல, யாரை பின்னூட்டத்தில் காயப்படுத்தினாலும், மத துவேஷம் செய்தாலும் ஆக்ஷன் தான் !

வவ்வால் 2:22:00 AM  

ஹா...ஹா..ஹா நல்லா கிளப்புறாங்கையா பீதிய... இந்த மூட்டைப்பூச்சி தொல்லை தாங்கலைப்பா :-))

நல்லது நடவடிக்கை எடுக்கலாம்..இதன் மூலம் பதிவில் மதவாதம் பரப்புவோரின் செயலும் குறைந்தால் நல்லதே :-))


முடிந்தால் செய்யவும்... செய்யவில்லை என்றால் இவர் வேலையே போகும் அளவுக்கு நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன், அப்புறம் யாரும் ஏன் அவரு ஏதோ விளையாட்டுக்கு சொன்னார் இப்படி செய்யலாமா என என்னையும் சொல்ல வேண்டாம்.

ஆக்‌ஷன் கிங் என்ன செய்யுதுன்னு பார்ப்போம் :-))

CS. Mohan Kumar 5:46:00 AM  

ஹா ஹா நான் என்ன அரசு வேலையா பாக்குறேன் என் மேலே வழக்கு போட்டு வேலையை விட்டு தூக்குறதுக்கு. தனியார் வேலை அவங்களே வேலை விட்டு தூக்கினா தான் உண்டு.

நான் ப்ளாக் எழுதுறது என் அலுவலகத்தில் எல்லாருக்கும் தெரியும். அவங்களே படிக்கிறாங்க. ஆபிஸ் நியூஸ்லெட்டரில்
ஊழியர் அறிமுகத்தில் என்னை பத்தி சொல்லும்போது வீடுதிரும்பல் ப்ளாக் லின்கோடு குடுத்தாங்க. ஸ்நாப் ஷாட் எடுத்து என் ப்ளாகில் போடலாம். மனைவி குழந்தை படம் இருப்பதால் போடவில்லை

அலுவலகத்தில் பதிவு எழுதுவதோ வெளியிடுவதோ கிடையாது; என் அலுவலக வேலை எப்போதும் மறுநாள் கூட தள்ளி போட மாட்டேன் அன்னிக்கே முடியணும் ! கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு !

ப்ளாகில் எனக்கு இருக்கும் நண்பர்களை விட எனது துறையில் இருக்கும் நண்பர்கள் பத்து மடங்கு. என்னிக்கோ ஒரு நாள் நானே ரிசைன் பண்ணிட்டு தனியா, அம்பது நூறு கம்பனிக்கு கன்சல்டன்ட் ஆக போறேன்; இதுவும் என் கம்பனிக்கு தெரியும்.

என் மேல் முதலில் இவர் வழக்கு போடட்டும் ; அப்போவாவது யார் என உலகுக்கு தெரியும் !

இவர் இப்படியே ஆடட்டும் ; மத்தவங்களை தொடர்ந்து ஹர்ட் பண்ணட்டும். எப்ப நான் சொன்னது நடக்கணுமோ அப்போ அது நிச்சயம் நடக்கும் !

வவ்வால் 6:11:00 AM  

ஹே ..ஹே ..ஹே ...இப்பத்தான் அடுத்து ஒரு கமெண்ட் போட்டாலும் ஆக்‌ஷன் சொன்னார், பதிலுக்கு நானும் ரெடினு சொன்னதும் என்னிக்கு ஆக்‌ஷன் எடுப்பனோ அன்னிக்கு எடுப்பேன்னு காலவரையற்ற ஒத்தி வைப்பு தீர்மானம் போட்டுடாரே :-))

கூடவே ஏகப்பட்ட தன்னிலை விளக்கம் ரொம்ப பயந்துட்டார்னு நினைக்கிறேன் :-))

என் கிட்டே இருக்க ஸ்கிரீன் ஷாட்ஸ் வச்சே இப்போ இவரு யாருக்கு திடீர்னு ஆதரவா பேசினாரோ அவங்க எல்லாம் உள்ள தள்ள முடியும்.


இவரு எதுன்னா செய்வார் அந்த செலவில் இந்த மதவாதப்பதிவர்களை அமுக்கிடலாம்னு பிளான் போட்டேன் எல்லாம் வேஸ்ட்டா போச்சு :-((
------------

இவ்வளவு மட்டமான எண்ணம் கொண்டவரை இது வரையில் பார்க்கவில்லை, இவர்ப்பதிவில் ஒரு மாற்றுக்கருத்து சொல்லிவிட்டேன் என பழிவாங்க இவ்ளோ துடித்து திடீர்னு இஸ்லாமியக்காவலர் அவதாரம் எல்லாம் எடுக்கிறார், இல்லாதக்கதை எல்லாம் பரப்புறார், இவரை நம்பி சொந்த விஷயம் பகிர்ந்துக்கொண்டால், இவருக்கு பிடிக்காமல் போனால் என்னவெல்லாம் செய்வார் ?

Unknown 6:43:00 AM  

@மோகன் குமார்
மோகன்குமார் உங்களை நெனைச்சா..!சிரிக்கின்றதா அழுவதான்னு
தெரியலை...?வவ்வால் முதல்முதன்லாக சண்டை போட்டதே என்கிட்டதான்...!ஆப்பிள் சிரி போன் விவகாரத்துல....!

நான் இதைவிட மோசமா பலரிடம் அடிவாங்கியிருக்கேன் ஒவ்வொரு சினிமா
விமர்சனங்களின் போதும்.மனசு மரத்துப்போச்சு சார்!விமர்சனங்களை தாங்கிக் கொள்பவன்தான் உண்மையான படைப்பாளி!
தாங்கிக்கொள்ளமுடியவில்லை என்றால் பொதுவில் வெளியிடக் கூடாது!

டோண்டு மேட்டர் வேற....! இது ஒரு பெண் புகைப்படம் தொடர்பான விசயம். மற்றும் அவரைப் போன்றே அவர் மாதிரியே எழுதி வாசகர்களை குழப்பிய கீழ்த்தரமான செயல்.(ஸ்பூப் அல்ல) ஆனால் இஸ்லாமியர்கள் மீது மதத்துவேசம் என்றால் இஸ்லாமியர்களின் இந்து மதத் துவேசத்திற்கும் உங்களால் கேஸ் போடமுடியுமா?

ரோட்டுல மழைகாலத்தில நடந்து போனா சேறு அடிக்கத்தான் செய்யும்..இது
முற்றிலும் வீனான வேலை..!நீங்கள் உங்கள் பாதையில் போய் கொண்டேயிருங்கள் இல்லை நான் மோதுவேன் என்றால் வவ்வாலும் ஒரு வழக்குரைஞராக இருந்தால் என்ன செய்வீங்க...அப்புறம் பிம்ளிக்கா பிளாக்கிதான்!

Unknown 7:42:00 AM  

@அருள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@வவ்வால்
எங்க நக்ஸ் எம்.ஜி.ஆர் மாதிரி அவ்வ்வ்....
@இந்திரா
என்னங்க செய்வது...?அப்புறம் எல்லாரும் கோவிச்சிக்கிட்டாங்கன்னா...!
@வேடந்தாங்கல் - கருண்
நன்றி மச்சி!
@மனசாட்சி
என்னாச்சு மாம்ஸ்!?
@சம்பத்குமார்
ஆமாம் சம்பத்
@மயிலன்
அவ்வளவு பரப்பளாவாவா இருக்கு..?
@ஜோதிஜி திருப்பூர்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!சார்!
@ராஜ்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!சார்!
@s suresh
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!சார்!
@விச்சு
ஹஹா...!கற்பனையாக கூட இருக்கலாம்!
@அஞ்சா சிங்கம்
சப்புன்னுதான் போயிருச்சு..!
@வரலாற்று சுவடுகள்
அதானே..!நல்ல ஐடியா கொடுக்கிறீங்க...!
@காட்டான்
எல்லாம் உங்க கிட்ட கத்துகிட்டதுண்ணே!
@sakthi
நன்றி சக்தி!
@வவ்வால்
ஹஹா...!விடுங்க வவ்வால் நீங்க எங்கூட சண்டை போடுங்க....!

அவசரமான வேலை ஒன்றால் வெளியூர் சென்றதால் என்னால் பதில் உடனடியாக போடமுடியவில்லை
நண்பர்கள் மன்னிக்கவும்..!

வவ்வால் 7:46:00 AM  

வீடுஜி,

உங்களுக்காவது புரிஞ்சுதே, அவரா என்ன என்னமோ கற்பனை செய்துக்கிறார்,நான் நக்ஸ் அண்ணே போட்டோவுக்கு எதார்த்தமா சொன்னதை அவர சொன்னதா கற்பனை செய்துக்கிறார், நீங்களே படித்துப்பாருங்கள்,அவரை அதில் எங்கே சொல்லி இருக்கேன் எனக்கு ஒன்னியும் பிரியலை.

// ஆனால் இஸ்லாமியர்கள் மீது மதத்துவேசம் என்றால் இஸ்லாமியர்களின் இந்து மதத் துவேசத்திற்கும் உங்களால் கேஸ் போடமுடியுமா?//

ஹி..ஹி அதானே,நானும் நல்ல சான்ஸ் இவரா போட்டால் ஒரு முடிவுக்கட்டிடலாம்னு பார்த்தேன் :-))

------------

வீடுஜி அப்புறம் சண்டைனு எல்லாம் சொல்லாதிங்க,நாம செய்தது விவாதம்,நான் அப்படித்தான் நினைப்பேன். ஒன்றைப்பற்றி விவாதம் செய்தால் பல உண்மைகள் நாம் உணரலாம் என நினைப்பேன்.

ச்சியர்ஸ்!

Philosophy Prabhakaran 10:58:00 AM  

@ வவ்வால் & மோகன் குமார்
உங்கள் இருவருடைய பின்னூட்டங்களையும் உலகமே உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் சண்டையிடுங்கள்...

அப்பால நாங்க போன்ல பேசிக்கிட்டோம், சமாதானம் ஆயிட்டோம்ன்னு சொன்னீங்கன்னா Tomato i will kill u :)

வவ்வால் 2:29:00 PM  

பிரபா,

என்னாது உலகமா ... அந்த உலகத்தில எத்தினி பேரு இருக்காங்கோ :-))

அவரு ஒரு காமெடி பீசுன்னு இப்ப பேசினது வச்சு தான் புரிஞ்சுக்கிட்டேன்.பார் கவுன்சிலில் கூட பதிவு ஆகாதவர்கள் எல்லாம் பிலிம் காட்டும் காலத்தில் , ஏதோ நான் தமாசாக பேசினால், வந்து கொல வெறி கூட்டுவது சரியா :-))

அஞ்சா சிங்கம் 5:13:00 AM  

அட பாவமே ரெண்டு நாள் இந்த பக்கம் வரவில்லை அதுக்குள்ள இவ்ளோ நடந்திறிச்சா....................
நகைச்சுவை உணர்வு நம்மவர்களிடம் குறைந்துவிட்டதோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது ...

வவ்வால் 1:11:00 PM  

அஞ்சா ஸிங்கம்,

நகைச்சுவைனா வீசம் என்ன விலைனு கேட்கிறவங்க எல்லாம் இருக்காங்கனு இப்போ தான்யா தெரியுது :-))

அதை விட முக்கியம் அவங்க தான் நகைச்சுவைக்கே அடிநாதம்,எனவே அவர்களை நாம் பயன்ப்படுத்திக்கொள்ள வேண்டும் :-))

some people became a paranoid what to do?

ச்ஷியர்ஸ்!

Unknown 8:40:00 PM  

நகைச்சுவை உணர்வு நம்மவர்களிடம் குறைந்துவிட்டதோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது ...
///////////////////////////
நகைச்சுவைனா வீசம் என்ன விலைனு கேட்கிறவங்க எல்லாம் இருக்காங்கனு இப்போ தான்யா தெரியுது :-))
//////////////////////
இரண்டு பேரும் என்னை ஓட்றீங்க போல......அப்புறம் நான் நொம்ம..................பயந்தவன்! மிரட்னா காச்சல் வந்திரும்!

சிராஜ் 8:45:00 PM  

// இவரு எதுன்னா செய்வார் அந்த செலவில் இந்த மதவாதப்பதிவர்களை அமுக்கிடலாம்னு பிளான் போட்டேன் எல்லாம் வேஸ்ட்டா போச்சு :-(( ///

ஆல் த பெஸ்ட்......

ஹா..ஹா..ஹா.. ROFL....

வவ்வால் 9:40:00 PM  

@வீடு சுரேஸ்குமார்

வீடுஜி,

இவ்ளோ நகைச்சுவை ததும்ப ஒருப்பதிவு போட்டு இருக்கீங்க ,உங்களை சொல்வேனா...

முன்னரே சொல்ல நினைத்தேன் வேற்று சில ஆடுகள் வந்ததால் கவனம் சிதறிவிட்டது ... கூழங்கல்லில் இருந்து மின்சாரம் எடுத்தானே நந்தகுமாரர்னு பி.கே.பி கதையை சுட்டிக்காட்டுனிங்களே, இன்னும் அது நியாபகம் வைத்திருக்கிங்களேன்னு சொல்ல நினைத்தேன், முழங்கை கூழாங்கல்லில் இடித்தால் ஷாக் ஆச்சு அப்போ கூழாங்கல்லில் மின்சாரம் இருக்குன்னு பிருந்தாவனமும் நந்தகுமாரனும் கதையில் வருவது தானே, அதில மோர் ஊத்தீன, சிறுநீர் ஊத்தினா கூட இந்த வண்டி ஓடும்னு கூட சொல்வாங்க :-))

-----------

சிராஜ்,

வாய் சிரிக்குது மனசு அழுவுதுன்னு நினைச்சிடப்போறாங்க மக்கள் :-))

உருண்டு,புரண்டு சிரிக்கும் போது நல்ல இடமா பார்த்து உருளுங்க இல்லைனா உடம்பெல்லாம் "புண்'ஆகிடும் :-))

முத்து குமரன் 2:32:00 PM  

ஆஹா, பல வருடங்கள் கழித்து பிருந்தாவனமும் நந்தகுமாரனும் கதைய நினைவூட்டியதற்க்கு நன்றி, அந்த நிரோத் பிரியாணியை மறக்க முடியவில்லை

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP