யோகநாதனின் உரை இறுதி பாகம்

>> Monday, June 4, 2012

இயற்கை காவலர் யோகநாதன் அவர்களின் அனைத்து 
உரைகளையும் படிக்க.....



சிங்கம்பட்டி ஜமீன் அனுமதி,இடம் கொடுத்தும் வனத்துறை அனுமதி கொடுக்கலை. சுத்தி...சுத்தி..பார்த்தால் இயற்கை ஆர்வலர்கள் அரசுடன்தான் போராட வேண்டியுள்ளது. மனசு விட்டு சொல்கிறேன் ஆறும் இயற்கையும் உங்களை நம்பித்தான் இருக்கு! எனக்கு அரசியல்வாதிகள் மீதோ, சினிமா நடிகர்கள் மீதோ, அரசு அதிகாரிகள் மீதோ எனக்கு சுத்தமா நம்பிக்கை கிடையாது சார்...! நீங்க...!மட்டும்தான் சுற்றுச் சூழலைப் பற்றி எந்த தடங்கலும், தடையும் இன்றி உண்மையாக எழுத முடியும். உங்களுக்கு விளம்பரம் வேண்டும் என்கிற அவசியம் கிடையாது? 

ஊடகத்துறையை விட நேர்மையாக உங்களால் மட்டுமே எழுத முடியும்! நீங்க எழுதுகின்ற எழுத்தில்தான் உண்மையிருக்கு.ஒரு மரம் ஒரு நகரத்தில் வெட்டும்போது 67,500000 ரூபாய் இழப்பு ஏற்படுகின்றது...அப்புறம் எத்தனை கோடி இழப்பு ஒரு நாளைக்கு ஏற்படுகிறது! யார் நட்டமரத்தை யார் வெட்டுவது? ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு மரத்தை விற்பனை செய்கிறான், 580ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கணக்கு காட்டுகிறான். இதையெல்லாம் யார் எழுதுவது?

செம்மொழி மாநாட்டுக்கு மரம் வெட்ட வந்தவன் இன்னும் போகலை! எல்லாத்தையும் வெட்டி முடிச்சிட்டுத்தான் போவான் திருடுவதில் மட்டும் அரசியல்வாதிகளிடம் கட்சிப் பாகுபாடு கிடையாது! மரம் வெட்டுகின்ற ஒப்பந்ததாரர் திமுககாரர், மாநகராட்சி மேயர் அதிமுககாரர் என்ன ஒற்றுமை பார்த்தீர்களா? நல்லது செய்ய ஒற்றுமையாக மாட்டாங்க...இவங்களை பார்த்து ஒற்றுமைய எல்லாரும் கத்துக்கலாம்!அவனுக்கு சப்போர்ட்டா இவன் தீர்மானம் போடுகிறான். அந்த தீர்மாணத்தை 120 கவுன்சிலர்களும் ஆதரவு தருகிறார்கள் எல்லாம் கூட்டு களவானிகள்...இவர்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியுமா?

மாசிஸ்ட்ரேட் இருக்கார் அவர் எப்படின்னா...முதல்நாள் நமக்கு ஆதரவா இருப்பாரு மறுநாள் அவர்களுக்கு ஆதரவா இருப்பாரு! அவருக்கு என்ன பிரச்சனையோ...? அடுத்தநாள் பேசவேமாட்டாரு...முதல் நாள் நீங்க செய்வது நல்ல காரியம் உங்களுக்கு உறுதுணையா இருப்பேன் அப்படிம்பாரு அடுத்த நாள் முகத்தை பார்க்கவே மாட்டாரு...நேருக்கு நேராக நான் உக்கார்ந்து இருந்தாலும் எங்கேயோ பார்ப்பாரு. சரின்னு அவர் பார்க்கற இடத்தில போய் நிற்பேன் உடனே வேறு பக்கம் திரும்பிக்குவாரு...என்னடா ஒன்னும் பேச மாட்டிங்கறாரே அப்படின்னு கீழ உக்கார்ந்து எழுதிகிட்ட இருக்கிற கிளர்க்கிடம் மரம் வெட்டுகின்ற புகைப்படத்தை ஐய்யாகிட்ட கொடுங்க அப்படிப்பேன்...அவரு கொடுத்தா வாங்கி கீழ போட்டுட்டு பேசக்கூட மாட்டாரு கையை காட்டி சைகையில பார்க்கறேன்பாரு அது அவ்வளவுதான்! வாய்தா...வாய்தான்னு இழுத்து கடைசியில வெக்கெஷன் லீவுல போயிட்டாரு.....இப்ப இரண்டு ஜீனியர் இருக்காங்க...அவிங்க எடுத்து தூசு தட்டுவதுக்குள்ள மரத்தையெல்லாம் வெட்டிட்டு அவன் போயிட்டான்.

அவினாசி சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் மறுபடியும் துளிர்த்து விட்டது...அதனால இப்ப விவரமா வேரோடு தோண்டியெடுக்கிறாங்க, இதை யார் எழுதுவா? பத்திரிக்கைகாரங்களா? அவங்க வாயத்தான் நெடுஞ்சாலைத்துறை விளம்பரம் கொடுத்து அடைச்சிடுறாங்களே! அதுவும் அட்டைபடம் விளம்பரம் கொடு்த்தா அவன் எழுதமாட்டான்...அப்ப உண்மைய யாரு எழுதுவது நீங்கதான் எழுதவேண்டும், வேற யாரும் எழுத முடியாதுங்க.....!எழுத முடியாதுங்க....!நீங்க என்னை கூப்பிட்டு பேச வைப்பதால் நான் கூறவில்லை...! நல்லா யோசிச்சுபாருங்க நீங்களே சொல்லுங்க....


நான் கூடங்குளத்துக்கு எதிர்ப்பான ஆளு! ஏன் எதிர்ப்பான ஆளு? அனுஉலையின் ஆய்வுகளில் கிட்டதட்ட பதினைந்து ஆய்வுகளை சரியாக செய்யவில்லை! இது உண்மை! என் மக்களின் கேள்விக்கு சரியான பதிலை கொடுத்துவிட்டு நீ கூடங்குளத்தை திற அப்படின்னு சொல்லக்கூடிய ஆள் நான்...சீனிவாசன் கோவை வந்தபோது எனக்கு வந்த கோபத்தில் அவரை அடிக்க போய்விட்டேன்..என்னை தூக்கி இரண்டு நாள் உள்ளகூட வைத்தாங்க...அதைப் பற்றி எனக்கு கவலையில்லை எனக்கு இந்த தேசத்தின் மீதும் மக்களின் மீதம் அக்கரை இருந்தது அதனால் என்னால் இதைச் செய்யமுடிந்தது.

அப்துல்கலாம் அவர்களை முன்அனுமதி எதுவும் இல்லாமல் சந்திக்ககூடியவன் நான்..! இனி கலாம் அவர்களை பார்க்க கூடிய அவசியம் எனக்கு இல்லை மெயில் அனுப்பிட்டேன் அவருக்கு...ஏன் சார் பக்கத்து வீட்டுக்காரன் பட்டினியா கிடக்கும்போது எங்கியோ இருக்கிற அநாதை ஆசிரமத்திக்கு பிரியாணி போட்டாலும் புண்ணியமில்லை சார்! எனக்கு சுத்தமாக கூடங்குளம் அனுஉலை மேல் நம்பிக்கையும் இல்லை உடன்பாடும் இல்லை.

இந்த மாதிரி ஜனாதிபதி விருது வாங்கிய ஒருவர் வேறு துறையில் இருந்தால்...நான் இந்த வேலை செய்வதற்கு டூட்டி பே தருவான், ஆனால் எங்கள் போக்குவரத்து துறையில் லாஸ் ஆப் பேதான், எங்க துறை செகரட்ரி என்னைப் பார்க்கும் போது பேப்பர்ல வந்த என்னைப்பற்றிய செய்தியை வெட்டி தன் டேபிள் கண்ணாடியின் கீழே வைத்துள்ளதாய் கூறினார். அவரிடம் நான் இதைப்பற்றி கூறினேன் அதன் பிறகு அவர் மறந்துவிட்டார் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை.என்னை கடலூர்க்கு மாற்றக் கோரி 270 கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் முதல்வருக்கு கோரிக்கை அனுப்பியிருக்கிறார்கள், தானே புயலில் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்க, நான் கண்டிப்பாக ஆர்வமாக இருக்கிறேன் குறைந்தது இரண்டு இலட்சம் மரம் மாணவர்களை வைத்தே வளர்ததுக் காட்டுவேன், மரம் நடுவது ஒன்றும் பெரிய விசயம் கிடையாது...! ஆனால் ஒட்டு மொத்தமாக அரசியல்வாதிகளைப்போல் சினிமா நடிகர்களைப்போல் ஐயாயிரம் பத்தாயிரம் மரம் நட்டு அதை சாவடிப்பதில் உடன்பாடு கிடையாது. விளம்பரமாக பத்திரிக்கையில் படம் போட்டு மக்களை ஏமாற்றவதற்கும் உடன்பாடு இல்லை.

ஒரு அகிலஉலகவிழாவிற்கு போகும் போது என்னிடம் விசிட்டிங்கார்டு கேட்டார்கள், இல்லையென்றேன்...!வெப்சைட் இருக்கா? என்றார்கள் அதுவும் இல்லை....!அட்லீஸ்ட் மெயில் ஐடியாவது இருக்கா...? என்றார்கள்....! அதுவும் இல்லை சார் என்றேன்! விக்கித்து நின்று விட்டார்கள்...அதன் பிறகு தியாகராஜன் என்கிற பேராசிரியர் திருவாரூர் இண்டர்நேசனல் யுனிவர்சிடியில் ரிஜிஸ்டர்...அவர்தான் வெப்சைட்டும் விசிட்டிங்கார்டும் அடித்துக்கொடுத்தார். என்னுடைய வெப்சைட்ட ஒரு 200பேர் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்! நீங்க என் வெப்சைட்ட பாருங்க


ஆர்வமிருப்பவர்கள் என்னைப்போல் இயற்கையை காக்க முன் வருவார்கள் இல்லையா அதைப்பார்த்து!நான் பார்த்த மனிதர்களில் தியாகராஜன் வித்தியாசமான மனிதர்,அதே மாதிரி மனோகரன்னு ஒருத்தர் ரோட்டரி கிளப்புல இருக்கிறாரு 10,000 மரம் நட்டார் ஒரு மரக்கன்று பத்து ரூபாய் என்றால் என்ன ஆச்சு! ஆனா நான் அப்படியில்ல விதை போட்டு ரெடி பண்ணுகிறேன், என்னுடைய டூட்டி முடிஞ்சதும் நேரா பெரிய...பெரிய ஹோட்டலைத் தேடிப் பேவேன் அவர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் காலி பாக்கட்டை வாங்கி வந்து நன்றாக கழுவி மண்ணை இட்டு நிரப்பி மதர் பெட் போட்டு முளைத்தவுடன் எடுத்துக் கொண்டு மலை,காடு பல இடங்களுக்கு கொண்டு போய் நட்டு விட்டு வேஸ்ட் வாட்டர் பாட்டிலை சேகரித்து அதன் அடிப்பாகத்தை வெட்டி விட்டு, மூடியில் துளையிட்டு பழைய துணியை திரி மாதிரி போட்டு, உள்ளே கொஞ்சம் கூழாங்கற்களைப் போட்டு...அதன் மீது தேங்காய் நார் போட்டு "ஃ" மாதிரி நாற்றைச் சுற்றியும் நட்டு விடுவேன் அதில் தண்ணீர் ஊற்றி விட்டால் பத்து நாளைக்கு மேல் தண்ணீர் ஊற்ற வேண்டியது இல்லை...மாதத்திற்கு மூன்று முறை ஊற்றினால் போதுமானது. இதுல எல்லாமே வேஸ்ட் பொருள்தான் தண்ணீர் பாட்டில், பழைய துணி, தேங்காய் நார் வீட்டில் கிடைக்ககூடிய பொருள்கள்தான் அனைத்தும், என் கூட டிரக்கிங் வரக்கூடியவங்க 20லிட்டர் தண்ணீர் தூக்கனும்...வருகிறவங்க வாங்க..

இவ்வளவு குண்டா இருக்குறார் எப்படி மலை ஏறுவார் என யோசிக்கிறிங்களா? டிரக்கிங்குல ஒரு விபத்து நடந்துவிட்டது, இரண்டு கால்களும் பலமாக அடிபட்டுவிட்டது, ஏழு மாதங்களாக படுத்த படுக்கையாக கால் இரண்டையும் மாவுகட்டு போட்டு கட்டி தொங்கவிட்டுட்டாங்க...அதனால உடம்பு கொஞ்சம் சதை போட்டுவிட்டது, இப்பொழுதுதான் வேலைக்கு போகிறேன்...இந்த காடுகளை இரசிப்பதற்கு நிறைய பேர் இருக்காங்க...நாம நேசிக்கனுங்க நம் தாய், நம் அன்னை, இயற்கைதான்.மேற்கு தொடர்ச்சி மலையில் மரம் நட்டால் ஜப்பானுக்கு காற்று!? இல்லையென்றால் ஜப்பானுக்கு காற்று இல்லை! எப்படி அவன் கண்டுபிடிச்சிருக்கான். 

பெல்ட் ஸ்கீம் என்று பெயர் அதனால நாம இங்க மரம் நட அவன் நிறைய உதவி செய்யறான். அவன் நாட்டு விஞ்ஞானி இங்க விசிட் செய்தான்...அவனிடம் நான் நட்ட மரங்களை காட்டினால் இன்னும் பல உதவி செய்வான் என்று நினைத்து மதியம் இரண்டு மணி இருக்கும் அழைத்துக் கொண்டு போனோம் மாலை நேரம் ஆனதால் வனவிலங்கு தொல்லையிருக்கும் என்று வனத்துறை கூறி அனுமதி தரவில்லை சும்மா பச்சையா இருப்பதெல்லாம் நான் நட்ட மரம் அப்படின்னு சொல்லுங்க என்றார்கள் வனத்துறை அதிகாரிகள், திரும்பி போயிட்டான், அவன் தீர்க்கமா யோசனை செய்கிறான் நமது அரசாங்கம் பின்னால் வரக்கூடிய சந்ததிக்கு என்ன திட்டம் வைத்திருக்கின்றது என்றால் ஒன்றுமேயில்லை யோசிங்க நீங்க...!

செம்மொழி மாநாடு நடந்த போது நட்டிய மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 1,8000மரம் நட்டியதாக கணக்கு!? ஆனால் ஒரு 85 மரம் கூட நடலை! ஒரு ஐஞ்சு மரம் நட்டாங்க படம் எடுத்தாங்க அவ்வளவுதான்....! அதுவும் எல்லா பத்திரிக்கையிலும் வந்தது. 

மரம் நிறைய அழிஞ்சிருச்சு வெப்பம் அதிகமாயிருச்சு இனி வரக்குடிய காலங்களில் ரேஷன் கடையில தண்ணீர் கிடைக்கும் நிலை வரும், அந்த சூழ்நிலை வரக்கூடிய அபாயம் நெருங்கிக்கொண்டுள்ளது, பிணத்தை கொண்டு 
போறாங்க தண்ணீர் வருகிறது பிணத்தை போட்டுவிட்டு எல்லாரும் தண்ணீர் பிடிக்க ஓடுகிறார்கள்...இந்த மாதிரி நிகழ்வு நம்ம நாட்டுல நடந்தது!

ஜீன் 5ம் தேதி ஒரு புத்தகம் வெளியிடுகிறேன், மூச்சுகாற்று என்கிற கவிதை நூல் அதில் உள்ள ஒரு கவிதை படித்து பாருங்கள்..! இயற்கையை நேசிப்பதுக்கும் காப்பதுக்கும் இதயத்தில் கொஞ்சம் ஈரம் உள்ளவர்கள் இருக்கிறார்கள், அதனால்தான் இயற்கை இன்னும் வாழ்கின்றது, இங்கிலாந்துல சர்வதேச கிரிக்கெட் மைதானம் தயார் செய்தார்கள், மைதானத்துக்கு நடுவில் ஒரு மரம் இருந்தது மரத்தை வெட்ட முடிவு செய்தார்கள் ஆனால் அரசு அனுமதி கொடுக்கலை! ஒரு மரத்துக்காக மைதானத்தை கொஞ்சம் தள்ளித் தயார் செய்தாங்க...இதுவே நம்ம நாட்டுல என்ன நடக்கின்றது?

மரம் மட்டும்தாங்க பேசாது அதனால அதை வெட்டுகிறான் இதே சாலையை அகலப்படுத்த கட்டிடத்தை கொஞ்சம் இடிச்சுக்கிறேன்னு கேட்டு பாருங்க விடமாட்டான் ஸடே வாங்கிருவான்,எனக்கு 25,000 மாணவர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொரு பிறந்த நாளின் போது ஒரு மரக்கன்று வளர்ப்பது என்று கடமையாக இருக்கிறார்கள், நீங்களும் உங்கள் பிறந்த நாளின் போது மரக்கன்றுகளை வளருங்கள் இயற்கை வளரட்டும் நண்பர்களே! இந்த அமைப்பில் உள்ளவர்கள் என்னோடு ஒரு நாள் ஒரு சுற்றுலா போல் வாருங்கள்...நீலகிரியோ..?வால்பாறையோ போகலாம், விவாதம் செய்யலாம், இயற்கை பற்றிய விழிப்புணர்வை பெறலாம், அங்க பேசும் போது அது சரியாக இருக்கும் முயற்சி செய்யுங்கள்.

நாம பிற மாநிலங்களுக்கு போகும் போது தமிழ் பேசுபவர்களைக் கண்டால் ஏற்படும் மகிழ்ச்சியைப் போல் இயற்கையை பற்றிய உரையாடலை இயற்கை 
சார்ந்த இடத்தில் பேசும் போது அதே அனுபவத்தைப் பெறலாம். நன்றி!

(உரை முடிந்தது ஆனால் யோகநாதனின் சேவைக்கு முடிவு கிடையாது)


நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கேபிள் சங்கர் அவர்களுக்கும்


நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பாசக்கார பாசறையின் தலைவர் அண்ணன் புதுகை அப்துல்லா அவர்களுக்கும் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களுக்கும், நண்பர்கள் சார்பாக மிக்க நன்றிகள்!
இந்த உரையை தொடர்ந்து நான் எழுத ஊக்கமளித்து பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள், உங்கள் கருத்துரையினை படித்த யோகநாதன் மிகவும் மகிழ்ந்து போனார்! உங்களுக்கு மிக்க நன்றியினை தெரிவித்துக் கொண்டார்........

20 comments:

MARI The Great 6:30:00 AM  

தொடரட்டும் அவரின் சீரிய இயற்கை தொண்டு..,

எங்களது வாழ்த்துக்களைம்,வணக்கங்களையும் அவரிடம் தெரிவியுங்கள் ..!

தமிழ்வாசி பிரகாஷ் 7:00:00 AM  

யோகநாதன் ஆற்றிய உரையை நாங்களும் அறியுமாறு பதிவிட்ட சுரேஷ்'க்கு நன்றி,,,

யோகநாதன் சேவை தொடர வாழ்த்துக்கள்.

நாய் நக்ஸ் 7:42:00 AM  

சூப்பர் சுரேஷ்.....

NICE WORK.....

ஜோதிஜி 8:40:00 AM  

நல்வாழ்த்துகள்

காட்டான் 2:07:00 PM  

யோகநாதன் "மாமனிதர்"!!!!!!!

Unknown 8:27:00 PM  

இந்த நல்ல உள்ளம் படைத்தவருக்கு முதலில் என் நன்றிகள்..

தொடரட்டும் அவரின் இயற்கை காப்பு பணி...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ 9:34:00 PM  

ஸலாம் சகோ.சுரேஸ்குமார்...

மிகப்பொருமையாக அவரின் அரிய உரையை இங்கே பலர் அறிய எழுத்தாக்கி இருக்கிறீர்கள்..! தங்கள் பணி மகத்தானது என்றால், சகோ.யோகநாதன் செய்துவரும் பணி ஈடிணையற்றது..!

நாமும் நம்மால் ஆன மரங்களை இனி நட்டு வளர்த்து காத்து பிற்கால சந்ததிக்கு விட்டு வைத்து செல்வதே... இந்த தொடரை படித்ததற்கு பயனாக அமையும்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ 9:37:00 PM  

எனது வலைப்பூவில் அறிமுகத்துக்கு அடுத்து, எனது முதல்ல்ல்ல்ல் இடுகையும் மரம் வளர்ப்பு பற்றியதுதான்..!

"நாம் ஒருவர். நமக்கு நால்வர்"(!?) / "We Want more & more GREEN"

சேம் ப்ளட்..!

Anonymous,  12:59:00 AM  

சிறந்த தொகுப்பு. நன்றி சுரேஷ்.

திண்டுக்கல் தனபாலன் 5:35:00 AM  

நல்ல தொகுப்பு ! வாழ்த்துக்கள் !

Unknown 6:28:00 AM  

இயற்கையை நேசிக்கும் உன்னதமான மனிதரை பற்றி அறிய தந்தமைக்கு நன்றிகள் கோடி தல

சென்னை பித்தன் 6:49:00 AM  

உரையை முழுமையாகத் தொகுத்தளித்தமைக்கு நன்றி.

Anonymous,  7:04:00 AM  

ஒரே மூச்சில் அத்தனையையும் படித்து முடித்தேன்..நன்றி நண்பரே...

vairamani 9:19:00 AM  

wonderful service. congrates

ராஜ நடராஜன் 2:11:00 PM  

நற்பணிகளுக்கும் கூட எதிர்ப்பும்,சமூக யதார்த்தங்களும்,சகோதரர் யோகநாதனின் போராட்டங்களும் பதிவின் மகிழ்வை பருக முடியவில்லை.

கலாகுமரன் 1:17:00 AM  

இயற்கை மீது அதீத பற்று கொண்ட அட்வென்ஞ்சர் யோகநாதனின் போராட்ட வாழ்க்கை படிக்க படிக்க விறு விறுப்பாக இருந்தது. எப்படியும் வாழலாம் என்பவர்கள் மத்தியில் இப்படித் தான் வாழவேண்டும் என்ற இவரின் கொள்கைகள் படிப்பவர்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது. பதிவிட்ட சுரேஸ் அவர்களுக்கு எனது நன்றி.

sakthi 9:01:00 PM  

உங்கள் தாகம் என்றும் தொடரட்டும் .வாழ்த்துக்கள்
நட்புடன் ,
கோவை சக்தி

Unknown 4:42:00 AM  

நல்ல பதிவு

aalunga 6:04:00 AM  

யோகநாதன் அவர்களின் பேச்சைத் தவற விட்டுவிட்டேன் என்கிற ஆதங்கத்தை அவரது பேச்சை எழுத்தாக்கி நிறைவு செய்து விட்டீர்கள்..
நன்றி!!

யோகநாதன் அவர்களின் சேவை தொடரட்டும்!!

இதுவரை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றி எழுத ஆர்வம் இருந்தாலும், அது தான் ஏற்கனவே பலர் எழுதுறாங்களே என்றூ எழுதவில்லை..
அவரது பேச்சால் ஊக்கம் கொண்டு இனி நானும் எழுதப் போகிறேன்..

என்னால் இயன்ற அளவு சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்க முயல்வேன்!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP