மரம் வெட்டுவதும் ஒரு கொலைதான்....

>> Sunday, May 27, 2012

யோகநாதன் அவர்களின் உரை முதல் பாகம்! படிக்க கிளிக் செய்யவும்




முதல்பாகத்தின் தொடர்ச்சி........


ஜெயசந்திரன் என்கிற நண்பர் தமிழ்நாடு கிரீன் பவுன்டேஷன் செகரட்டரி அவர் வந்து ஆறுதலா ‘நான் உனக்கு பக்கபலமா இருக்கிறேன்' அப்படின்னு சொல்லுறாரு...அப்புறம் மரம் வெட்டிய இடத்தில வீதியில இருக்கிற விளம்பர பிளக்ஸ் போர்டை எடுத்து அதுல ஒரு பேப்பர ஒட்டி “இங்கு மரம் வெட்டப்பட்டது அரசு கண்டு கொள்ளுமா?” அப்படின்னு எழுதி வைத்து விடுவேன்.


இதனால போலீஸ்காரங்களுக்கு எனக்கும் பிரச்சனையாச்சு.! “கூகைக்கு எலி எங்க இருக்கும் என்று தெரியும்” என்பதைப்போல் எனக்கு எங்க எங்க மரம் வெட்டுறானுக, கல் குவாரி வைத்து கல் உடைக்கிறாங்கன்னு... தேடுறதே வேலையாப் போச்சு! 1987ல் கலைக்டர் ராஜ்குமார் இருந்தபோதுதான்..கடுமையான அவரின் நடவடிக்கையினால் தேயிலைத் தொழிற்ச்சாலைகளுக்கு பிளைன்ஸ்ல இருந்து காட்டு கருவேல மரங்களை வெட்டி வந்து தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப் பட்டது.

அதன் பிறகு அப்ப சச்சிதானந்தா ஸ்கூல்.. இப்ப கிரீன்வேலி ஸ்கூல் சிலைடு புரஜக்டர் கொடுத்தாங்க, பெட்டி மாதிரி இருக்கும் ஒவ்வோரு படமா வைத்தா திரையில படம் தெரியும். காட்டுக்குள்ள விலங்குகளை படம் எடுக்கின்ற WORLD WILD போட்டோகிராப்பர் நண்பர்களிடம் படம் வாங்கிக் கொண்டு அதை திரையில் மாணவர்களுக்கு காட்டி பாடம் எடுப்பேன்.



ஆங்கிலம் படிக்கத்தெரியாத நான் ஆங்கிலப் பேப்பர் வாங்கினேன்! ஞாயிறு தோறும் அதில் வரும் விலங்குகள் மற்றும்  காடுகள் பற்றிய தகவல்களை, நான் செல்லும் பள்ளியில் கொடி மாதிரி ஒட்டித் தொங்கவிட்டு அதைப் பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு விளக்குவேன்.இந்த மாதிரி வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது...மரம் வெட்டும் மாஃபியாக்களிடமிருந்து ஒளிந்து வாழக்கூடிய சூழ்நிலை எனக்கேற்ப்பட்டது. 


அதன் பிறகு எனக்கு திருமணம் நடைபெற்றது அதன்பிறகு மேட்டுப்பாளையம் வந்தேன். மேட்டுப்பாளையம் வந்த பிறகு ஒரு தகவல் எனக்கு வந்தது! 16 லாரி நிறைய வெட்டப்பட்டமரம் குன்னூர் வழியாக வந்து கொண்டு இருப்பதாக...என் நண்பர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு பிளாக் தண்டர் முன் நின்று கொண்டு இருந்தோம். கூட இருக்கின்ற நண்பர் ஒருவர் எதற்கும் சொல்லிவிடலாம் என DFOவுக்கு போன் போட்டு தகவலைச் சொல்கிறார். உடனே DFO மரம் கடத்தி வருபவர்களிடம் தகவல் சொல்லிவிட்டார், அவர்கள் கொண்டு வந்த வெட்டிய மரங்களை வனப்பகுதியில கொட்டி விட்டு திரும்பி போய்விடுகின்றனர், ஒரு நாலு லாரி மட்டும் திரும்பி வருகிறது. கடத்தல் மாஃபியாக்கள் தூப்பாக்கி வைத்திருக்க வாய்ப்பிருப்பதால் போலீஸ்க்கும் தகவல் சொல்லியிருந்தோம் வந்த நாலு லாரியில் ஒன்றும் இல்லை என்றவுடன் பொய் வழக்கு தொடுத்ததாக என்னை கைது செய்தது காவல் துறை. அதன் பிறகு நண்பர்கள் என்னை மீட்டார்கள்.



அந்த சம்பவத்திற்கு பிறகு போராட்டங்களை கைவிட்டு விட்டு மாணவச் செல்வங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என கடந்த 26 வருடங்களாக இந்த பணியை செய்து கொண்டிருக்கிறேன். இப்படியொரு அரங்கம் என்று தெரிந்து இருந்தால் என்னுடைய ஸ்லைடு பெட்டியை தூக்கிக் கொண்டு வந்திருப்பேன்.


மரம் என்ன செய்கின்றது பூச்சி,புழுக்கள் நமக்கு எவ்வாறு உதவுகிறது, என்று ஒரு மணி நேரத்திக்கு மேலாக ஸ்லைடு ஷோ பண்ணுகிறேன், இதைப் பார்க்கின்றவர்கள் கண்டிப்பாக ஒரு புல்லைப் பிடுங்குவதற்கு கூட யோசனை செய்வார்கள். அந்தளவு 3600க்கும் அதிகமான படங்களை வைத்து நான் பல பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று விரிவான பாடமாக நடத்துகின்றேன்.


நான் என் எம்.டியிடம் அனுமதி பெற்று திங்கள் விடுமுறை நாளாக வேண்டும் என்று அனுமதி வாங்கியிருக்கின்றேன். ஏனேன்றால் இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் திங்கள் கிழமை பள்ளிக்கு வரும் மாணவன் பிரஷ்சாக வருவான், அப்ப முதல் வகுப்பாக நான் என் பாடத்தை நடத்தவதால் பசுமரத்து ஆனி போல அவன் மனதில் இந்த பாடம் பதிந்து விடும். வாழ்வியல் கல்வியாக நான் மாணவர்களிடம் இயற்கையை நேசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவதை சேவையாக இல்லாமல் கடமையாக செய்கிறேன்.



நிறைய வழக்கு போட்டிருக்கிறேன், கிட்டத்தட்ட ஒன்பது வழக்குகளில் வெற்றியும் பெற்றிருக்கிறேன். முக்கியமான ஒன்று கூறுகிறேன் கேளுங்கள் உலகத்தில் எங்கும் போடாத தீர்மானத்தை கோவை மாநகராட்சி போட்டிருக்கின்றது அது என்னவென்றால் “மரம் வெட்டுவதை தடுப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்” இதுதான் அந்த தீர்மானம்! புதியதலைமுறையில் நேருக்குநேர் நிகழ்ச்சி நடத்தினார்கள், நான் கேட்ட ஒவ்வோரு கேள்விகளுக்கு மேயராலும் பதில்சொல்லமுடியவில்லை....!கலைக்டராலும் பதில் சொல்லமுடியவில்லை....!எதிர்க்கட்சி தலைவராலும் பதில் சொல்ல முடியவில்லை...! கடைசியில் நான் மிக மனவேதனையுடன் 101 கவுன்சிலர்களையும் அறிவாளிகளாகப் பார்த்தேன் இப்பொழுது இந்த தீர்மானத்தை ஆதரித்த 101 கவுன்சிலர்களையும் அடி முட்டாளாக பார்க்கிறேன் என்று கூறிவிட்டு வந்து விட்டேன்....ஒருவர் கூட இந்த தீர்மாணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!


நான் கொஞ்சம் கவிதை எழுதுவேன், திருச்சி ரோட்டுல 1600 மரம் நட்ட போது ஒரு கவிதை எழுதினேன் சொல்கிறேன் கேளுங்கள்..


சற்று நேரத்திற்கு முன்
நிமிர்ந்து நின்ற மரம்....
இப்பொழுது கவிழ்ந்து
கிடக்கின்றது....
மிக பகட்டாய் போடப்போகும்
சாலைகளுக்காக....
ஆக்ஸிஜன் குறைவால்
அள்ளிக் கொண்டு
செல்கிறது ஆம்புலன்ஸ்
அலறலோடு....
வெட்கி சிரிக்கின்றது
வேரோடு உள்ள மரம்.


லாக்கப் சந்திரன் என்பவர் இந்த கவிதையை பெரிய பெரிய பிளக்ஸ் பேனர் செய்து நகர் முழுவதும் வைத்தார்.

அதன் பிறகு இன்னோன்று


வேண்டாம் வெட்டியறிதல்...
வேண்டும் இயற்கையறிதல்.


இதை எழுதி வைத்தேன் இரவொடு இரவாக பிச்சி வீசிட்டாங்க...இப்ப என்ன செய்திருக்கிறார்கள் என்றால் எனக்கு டிரான்ஸ்பர் போட்டிருக்காங்க மேட்டுப்பாளையத்திற்கு. போக்குவரத்து துறையில் மிக அதிகமாக குறுகிய காலத்தில் மாற்றல் செய்யப்பட்டது என்னைய மட்டும்தான் இருக்கும் 23 மாதத்தில் ஒன்பது மாற்றல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் சென்று எங்க ஜி.எம் கிட்ட போய் சொன்னேன், கொஞ்ச நாள் பொறுத்துகங்க பிறகு பார்க்கலாம் என்று சொன்னாரு...அவரை விட மேலதிகாரி ஒருவர் அவர் கொஞ்சம் ஈர மனசு உள்ளவரு அவர் சொன்னரு ஏற்கனவே டிரான்ஸ்பர் ஆனவங்களை ரிலீப் பண்ணுங்க....!இல்லையென்றால் வழக்கு தொடருவேன் அப்படின்னு சொல்லச் சொன்னரு.

கோவையில் இருந்து கூடலூர் மாற்றி விட்டால் நான் எந்த வேலையும் செய்யமுடியாது! அப்படியே செய்தாலும் மூன்று நாள் லீவு போடனும். அது சிரமம் நிறைய loss of payee தான் எனக்கு. ஒரு நிகழ்வுக்கு வருகிறேன் என்று உறுதியளித்துவிட்டால் கோடி ரூபாய் வருமாணம் என்றாலும் போக மாட்டேன்.

கோவையில் நிறைய ஜாதிக் குறுக்கீடுகள் உள்ளன...! கோயமுத்தூர்ன்னா நாகரிகமான மரியாதையான ஊர் என்று மைக்குல வேனா பீத்திக்கலாம்.ஆனால் அவன் வேற ஜாதி! இவன் வேற ஜாதி! என்கிற பாகுபாடு அதிகம் உள்ள ஊர். கோயமுத்தூர்ல இருக்கிறவங்க எல்லாரும் அறிவிஜீவி கிடையாது....அதற்க்கு உதாரணமாக ஒரு சம்பவம்.

((((அடுத்த பதிவில் முகத்திரை கிழிக்கப்படும்............)))))

20 comments:

MARI The Great 2:45:00 AM  

தொடரட்டும் திரு.யோகநாதன் அவர்களின் சீரிய பணி ..!

பதிவின் தலைப்பு அருமை தல :)

Unknown 2:56:00 AM  

தனி மனிதனின் உழப்பு, முயற்சி,
பணி அனைவரும் அறிய வேண்டியன!
தங்கள் பதிவு பாராட்டத் தக்க தாகும்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

கேரளாக்காரன் 3:22:00 AM  

பாராட்டப்பட வேண்டியவர் என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது கோவில் கட்டி கும்பிடப்படவேண்டியவர்

முடிந்தவரை அவருக்கு தோள்கொடுக்க அனைவரும் பாடுபடுவோம்....

அதாங்க நாமளும் குறைந்தது ஒரு 50 மரமாவது நடுவோம்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ 4:55:00 AM  

ஸலாம் சகோ.சுரேஸ் குமார்,
மிக அருமையான உரை பகிர்வு. இப்போதுதான் கண்டேன். உடன் முதல் பாகமும் படிக்காமல் செல்ல இயலவில்லை. சகோ.யோகநாதன் அவர்களின் இந்த மிகச்சிறப்பான மானுடப்பணி மகத்தானது..! ஆக, மொத்தம் ஒரு மகாத்மாவுடன் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..! இந்த நினைப்பே மகிழ்வை தருகிறது..! பகிர்விற்கு மிக்க நன்றி சகோ..!

rajamelaiyur 5:15:00 AM  

பல மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் இப்படி படிச்சா முட்டாலாகத்ஹன் உள்ளனர்

rajamelaiyur 5:16:00 AM  

ஒரு நல்லவரின் பேச்சை கேட்காதது அவருக்கு நஷ்டம் இல்லை நாட்டுக்குத்தான் நஷ்டம்

அனுஷ்யா 5:50:00 AM  

எப்படி கருத்து சொல்வது என்று தெரியவில்லை..
ஒரு முறை அவரை நேரில் சந்தித்து அவரது கையை தொட்டு பார்க்க வேண்டும்..

Anonymous,  6:01:00 AM  

arumayana adhesamayam poruppattra adhigarigal,arasiyalvadhigal mattrum podhumakkal evargal edherkkeduththaloom singaporai paar amerikkavai paar enbar namudaiya ooril maram vaiththaal indha adhimedhaavigal iravodu iravaaga vettichaaippar thangaludaiya muyarchchi vetripera vaazhththukkal,
nandri surendran

aalunga 8:16:00 AM  

ஆகா...
இவர் பேசியதை நான் முழுசா கேட்கலையே!!

படிக்கும் போதே ரத்தம் கொதிக்குது!!

மரம் வெட்டுவோம் என்று தீர்மானம் போடுபவர்கள் உலகை அழிக்கிறார்கள்!!

மகேந்திரன் 9:51:00 AM  

அருமையான ஒரு நண்பர் பற்றிய அறிமுகம்..
பரந்த பூமியை பசுமையாய் ஆக்குவதற்கு
எத்தனிக்கும் அவருக்கு என் கோடானுகோடி
சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அருகிருந்து மனமுவந்து துணை நிற்போம்...

காட்டான் 11:41:00 AM  

ஆச்சரியமான மனிதர் யோகநாதன்...!!!!

திண்டுக்கல் தனபாலன் 7:21:00 PM  

நல்ல பதிவு சார் ! விரும்பிப் படித்தேன் !

Unknown 9:13:00 PM  

நல்ல பதிவு எல்லாரும் அறிய வேண்டிய விடயம்....

Unknown 10:30:00 PM  

படித்தவுடன் அவர் மேல் மிகவும் மரியாதை வருகிறது, எத்தனை போராட்டம் வந்தாலும் தாங்கும் அவரின் மன உறுதிக்கு தலைவணங்குகிறேன்.

கோவையில் உள்ள ஜாதிவெறி பற்றி அவர் கூறுவது முழுதும் உண்மையே, நானும் இதனைபற்றி தனிப்பதிவே எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்

சசிகலா 11:46:00 PM  

வேண்டாம் வெட்டியறிதல்...
வேண்டும் இயற்கையறிதல்.
வணங்கி வரவேற்கிறேன் நண்பரின் செயல்களை .

Unknown 8:11:00 PM  

அனைவரும் அறிய வேண்டிய விஷயங்கள்...மாமனிதன் யோகநாதன் அவர்களுக்கும் பகிர்ந்த தங்களுக்கும் நன்றி!

ராஜ நடராஜன் 12:55:00 PM  

சுரேஷ்!யாரோ ஒருவரின் தளத்தில் பின்னுட்டத்தில் சி.பிக்கு ஆதரவாக நீங்கள் இட்ட பின்னூட்டத்தையடுத்து அதே நிலைப்பாட்டில் நானு பின்னூட்டமிட்ட பின்பே உங்கள் பெயரைக் கவனிக்கத் துவங்கினேன்.

யோகநாதனின் முதல் பகுதி உங்களை இன்னும் அருகில் கொண்டு வந்தது.

சில மனிதர்கள் நமக்கு மிக அருகிலேயே வலம் வருவார்கள்.ஆனால் நாம் ஊன்றிக்கவனிக்க தவறி விடுவோம்.பலரும் உணர்வு பூர்வமாக பின்னூட்டமிட்டிருந்தாலும் கூட சகோ.முகமது ஆஷிக் (சிட்டிசன்) பின்னூட்டம் எனனை அதிகம் கவர்ந்தது.

நண்பர் யோகநாதனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7:00:00 PM  

யோகநானின் ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே சொல்லி இருக்கிறீர்கள். அந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றதில் மகிழ்ச்சி.மரங்களுக்காகப் போராடும் இந்த மாமனிதனின் வாழ்க்கை சரித்த்ரத்தில் இடம்பெற வேண்டிய ஒன்று. வந்திருந்த அத்தனைப் பதிவர்களும் இதைப் பற்றிய பதிவை போடவேண்டியது அவசியம். மிக அருமையாக எழுதிவருகிறீர்கள்

சித்திரவீதிக்காரன் 12:57:00 AM  

மரங்களின் மீது தீராத காதல் கொண்ட யோகநாதனின் உரையை அழகாக, அப்படியே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP