"அவனியாபுரம்" சென்ற பதிவர்’ஸ்(மாட்டை அடக்க!!!!!!?????????)

>> Sunday, January 15, 2012


வணக்கம் மக்காஸ்; "அவனியாபுரம்" ஜல்லிகட்டு நிகழ்ச்சியை பற்றி பதிவிடப் போகிறேன்! என்னோடு நீங்களும் வரனும்,(பயம்)எனக்கு நீங்கள் கூட இருந்தால் எனக்கு சிறிது உதவியாக இருக்கும்,

அன்புடன்(பயத்துடன்)
தமிழ்வாசி பிரகாஷ்.



இந்த கடிதத்தை "CC" போட்டு அனுப்பிய கடிதம் கண்டவுடன் சிபி செந்தில்குமார்,மனோ,விக்கி,பிலாசபி பிரபா,நாய்நக்ஸ்,மெட்ராஸ்பவன் சிவக்குமார், எல்லாம் கிளம்பி "அவனியாபுரம்" வந்தார்கள்…இனி என்ன நடந்ததுன்னா! ஒரு கொசுவர்த்திய அப்படியே சுத்துங்க……..!



பஸ்லிருந்து இறங்கியதும்…சிவக்குமார் என் இனிய தமிழ்மக்களே..! என்று "பாரதிராஜா" ஸ்டைல்ல சொன்னவரு ரோட்டுல இருந்த குழிய' கவனிக்காம..லைட்டா ஸ்லிப்பானாரு…பிலாசபி தாங்கிப் பிடிச்சிட்டாரு….பிடிச்சிட்டு "சாலைக்கு வணக்கம் கீழ விழுந்தா சுனக்கம்"
என்றார்…

கடுப்பான' சிவக்குமார் இதுக்கு நீ…என்னை பிடிக்காம' இருந்திருக்கலாம்…

சரி விடுங்க..' இனி விழுந்தா பிடிக்கலை! என்றார்…

"நாய்நக்ஸ்" வேறு புலம்பிக்கொண்டே வருகிறார்....
ஏம்பா...! தமிழ்வாசி நான் ஏதோ "பதிவர் சந்திப்பா" இருக்குமோன்னு வந்தேன் மனோ,விக்கிய காணலை.... ?இப்படி "டேன்ஜரான" இடத்திக்கு கூட்டிட்டு வந்திட்டிங்களே! அப்படின்னு புலம்புனாரு….

மனோ,விக்கி நெல்லையில் இருந்து "கார்ல" வந்து கொண்டு இருக்காங்க இப்ப வந்திடுவாங்க போன்..' செய்தாங்க!  அண்ணே! பயப்படாதிங்க! நாம எல்லாம் உயரமான மேடையில் நின்று கொள்ளலாம்… "சிபி" மட்டும் மாட்டை' அடக்குவார் என்றார்.

சிபி "ஙே" என்று விழிக்க…என்னது மாட்டை அடக்கறதா...? என்றார்.

உடனே சிவக்குமார்' அண்ணா ஏன்? பயப்படுறீங்க… இரண்டு "டுவிட்ட" எடுத்து விடுங்க மாடு "கெக்கபிக்கேன்னு" சிரிச்சுட்டு தானா சரண்டர் ஆயிடும்'

ஆகும்….ஆகும்….என் "டவுசர்" கிழிஞ்சிரும்…!

நாய்நக்ஸ் உடனே..' இங்கிலீஸ் தெரிஞ்ச மாடா இருந்தா…!நம்ம ஆளு என்ன பண்ணுவாரு…?என்றார்

இரண்டு "கில்மா" பட ஸ்டில்'ச காண்பிச்சு மாட்டை..' அடக்குவாரு…என்ற "பிலாசபி" 'யோவ் இதை "சபை" குறிப்புல' இருந்து எடுத்து விடுங்கய்யா… 'எவனாவது மாடு பிடித்த மாவீர பதிவர்'ன்னு "போஸ்ட்" போட்டிடுவானுக…

'நான் இதை பதிவா! போடுவேன் என்றார்' நாய்நக்ஸ்..

வந்து "கும்மி" அடிச்சிருவோம்…! ஜாக்கிரதை என்ற சிபி'யை கொஞ்சம் பயமாகத்தான் பார்த்தார் நாய்ஸ்…!அப்புறம்தான் தெரிந்தது ஒரு "மாடு" ஒன்று 'கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தது….'மாடு..மாடு…என கத்தினார்! எல்லாரும் ஒல்லி'யாக இருந்த்தால் டக்'கென்று அருகில் இருந்த மரத்தில் ஏறிக்கொண்டார்கள், நக்ஸ் ஏற முடியவில்லை, பிலாசபி கைநீட்டி தூக்கிப் பார்த்தார், முடியவில்லை 'யோவ்' முடியலையா இந்த வருடம் ஜல்லிகட்டு, முதல் விழுப்புண்! வீரன் நீதான்யா…என்றார், 

பயத்தில் 'கண்ணை மூடிக்கொண்டார்....'மாட்டின் "கால்குளம்பு" சத்தம் "கர்னகொடூரமாக" மேலும் கிலியை உண்டாக்கியது, கால்கள் வேறு பயத்தில் 'கிடுகிடுவென ஆடியது.'  அப்படியே! நின்று கொண்டார்.....,

தமிழ்வாசி தன்னிடம் இருந்த பைனாகுலர் மூலம் பார்த்து விட்டு...யோவ்! 'மரத்தை விட்டு இறங்குகய்யா....'அது மாடு இல்லை! "கழுதை" என்றவுடன்தான், நக்ஸ்க்கு உயிர் வந்தது' கண்ணை திறந்து பார்த்தார், ஒரு கழுதை வேகமாய் ஓடி வந்தது...' இவர்களை கண்டு மிரண்டு வேறு வழியில் ஓடி தூரமாய் நின்று' கனைத்தது....

அடப்பாவிகளா...! உங்களை நான் துணைக்கு அழைச்சா...இப்படியிருக்கிங்க என்றார் பிரகாஷ்.

ஹலோ....பிரகாஷ்...நீங்க தவறா நினைச்சுட்டிங்க...' நாங்க "சென்னையில" இருப்பதால் சும்மா மரம் ஏறி பயிற்சி எடுத்தோம்,' என்றார் சிவா!

பயிற்சி எடுக்கிற ஆளு ஏன்யா பல்லி மாதிரி ஒட்டிகிட்டிங்க...ஹே!ஹே! என்று நக்கல் அடித்தார் பிரகாஷ்.

விடுய்யா...விடுய்யா....எவனாவது 'மரத்தில் ஏறிய "மெட்ராஸ்பவன்" என்று பதிவு போட்டு நக்கல் பண்ணப்போறான்.....,இதையும் அவைகுறிப்புல' இருந்து நீக்கிவிடு என்றார்.


நாம் "பல்பு" வாங்கியதை...அவை குறிப்புல' இருந்து நீக்கினா...'நம்ம "பெயர்" மட்டும் தான் அவைகுறிப்பு'ல இருக்கும் போல...' என்று "பிலாசபி'' நக்கல்' அடித்தார்.

எல்லாரும் "ஜல்லிகட்டு" நடக்கும் இடத்தை நோக்கி நடந்தார்கள்...



ஆமா பிலாசபி...!எம்.ஆர்.ராதா படத்தை ஏன்... உங்க பிளாக்குல வச்சிருக்குறிங்க...? உங்க படத்தை..வைக்கலாமில்ல...? என்றார் சிபி,

என் படத்தை வச்சிருக்கிறேன்' பார்க்கலையா? நீங்க...!

எங்க..எங்க....பார்க்கலையே!?

எம்.ஆர்.ராதா படத்திக்கு பின்னாடி வச்சிருக்கேன்' பின்னாடி போய் பார்த்தாத்தான் தெரியும்...'

"யோவ்...! ஓவர் குசும்புயா உனக்கு.."

'ஓவராத்தான் இருக்கு..'உங்களுக்கு வேணுமா..'அட கொஞ்சம் வாங்கிக்கங்க..'

"ஆள' விடுய்யா சாமி.." ஓடி விட்டார் சிபி"

நாய்நக்ஸ் வந்து சேர்ந்து கொண்டார்...
தம்பி பிரபா என்னய்யா சொன்ன...?"சிபி" தெரிச்சு ஓடுறார்...!

நாய்நக்ஸ்க்கு..' 'கோவம் வந்தா கடிச்சு வச்சிருவாருன்னேன்..'ஓடுறாரு..என்ற "பிலாசபியை" பார்த்து நறநற'வென்று பல்லைக் கடித்தவாறு "உன்னை பற்றி உள்குத்து போடப் போகிறேன் பாரு..." என்றார் நக்ஸ்.

'நீங்க... முதல்ல... ஒரு மகாமகத்திக்கு" ஒருதடவையாவது பதிவை' போடுங்க சார்! என்று கடுப்பை ஏற்ற…'அவரிடம் இருந்து கழன்று சிவக்குமாருடன்
இணைந்து கொண்டார்.

சரி! சும்மா வருவானே… என்று சிவக்குமாரிடம் "சிவா..புத்தக கண்காட்சிக்கு போனிங்களே" அங்க என்ன...என்ன... !பார்திங்க...? என்று சிறு பிட்டைப்
போட்டார் "புத்தகத்தைப்"..பார்த்தேன்! வந்திருந்த "எல்லாரையும்" பார்த்தேன்! இதில என்ன சந்தேகம்....?என்றார்..

"ஆஹா; கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க...."

யோவ்..! இப்பத்தான் "ஜல்லிகட்டுக்கு" போறோம் எங்கய்யா கிளம்பிட்டோம்..?என்று தமிழ்வாசி! சொல்ல.. "தேர்ந்தலுக்கு பின் வடிவேலு" கணக்கா ஆனாருங்க நம்ம நக்ஸ்.


உடனே போனைப்போட்டாரு விக்கிக்கு....

க்ர்ர்ர்ர்ர்ர்ர்.................

'ஹலோ...சொல்லுங்க...நக்ஸ்'

'ஹலோ..!விக்கியா...'

'யோவ்...!என் நெம்பருக்குதான்யா கூப்பிட்ட...' விக்கி'யில்லாம வேற யாரு... பேசுவாங்க...?'

'ஆஹா...! நிமிசத்திக்கு "நாற்பது" காசு செலவு பண்ணி "ஆப்புல நாமளே போய் உக்காருகிறோமே..." என்று நக்ஸ் சிந்திக்க....!'

'ஹலோ! இருக்கிங்களா நக்ஸ்...?'

'இருக்கம்... இருக்கம்... என்றார் கடுப்பாக...!'

'விடுய்யா...விடுய்யா...கோவிக்காத தமாசு...'

'சரி...சரி... நான் ஒன்னும் தவறா நினைக்கல...எங்க வந்திட்டு இருக்கிங்க...?

மதுரையை' இன்னும் ஒரு மணி நேரத்தில "டச்" பண்ணிருவோம்
"மனோ" இருக்கிறாரா....

"தஸ்புஸ்..என்று சத்தம்"

"மனோ" தூங்கிட்டு இருக்கிறார்!

'ஓ...அப்படி சொல்ல சொன்னாரா...?

'ஆமாம்...!ஹிஹி... இல்ல...சாரி...'

'நடக்கட்டுங்க...!நடக்கட்டுங்க...!எப்படியும் இங்க வந்து தானே ஆகனும்...! அப்புறம் வச்சிக்கிறேன்....!என்று போனை வைத்து விட்டு "கடுப்பாக" நண்பர்கள் பின் நடந்தார்.

'ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் மாடுகள் நிறைய கட்டி வைக்கப் பட்டிருந்தது….'சிபி" தான் வைத்திருந்த கேமராவில் மாடுகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார், இன்னும் ஜல்லி கட்டு ஆரம்பிக்க..நேரம் இருந்தது, ஒரு மரநிழலில் அனைவரும் அமர்ந்து கொண்டனர்.

சிபி தமிழ்வாசியிடம் யோவ்..! 'மக்கா நான் மாட்டை அடக்கிற மாதிரி படம் எடுக்கனும்' என்றார்,

இதோ இந்த மாட்டை அடக்குங்க... படம் எடுக்கலாம் என்று ஒரு மேய்ந்து கொண்டிருந்த "ஆட்டை" காட்டினார்…நக்ஸ்

ஹே..!ஹே…!
 ''ஒரு பலியாடு
வெள்ளாட்டைக்
காட்டுதே..ஆச்சர்யக்குறி''
என்றார் பிலாசபி…

ஒரு சின்ன கல்லை எடுத்து "பிலாசபி" மேல் எரிந்தார்..நக்ஸ்

"கோக்" பாட்டிலில் வைத்து என்னவோ குடித்து கொண்டு இருந்தார் பிலாசபி"
உடனே நக்ஸ்... 'தம்பி என்னய்யா அது ஓம் வாட்டரா'(ஓமம் தண்ணீர் வயிற்றுவலிக்கு குடிப்பது)

சிவக்குமார் 'அது ஓம் வாட்டர் இல்லைய்யா' 'ஹோம் வாட்டர்…'என்றார்.

சரிதான்…என்றார் சிபி….

சிபிக்கு மாட்டை அடக்கிற... மாதிரி படம் எடுக்க ஒரு நல்ல! சோப்ளாங்கி! மாட்டைத் தேடிக்கொண்டு இருந்தார்….அங்க…இங்க…தேடி ஒரு மாட்டை கண்டுபிடித்தனர்! அது பார்ப்பதுக்கு மாடு மாதிரி இருந்தது' தவிர "தேமே..." என்று நின்று கொண்டு இருந்தது…

'சிபி மெதுவாக பக்கத்தில் சென்று ஆராய்ந்தார்...'
அமைதியா இருக்கிற மாதிரி நின்னுட்டு பக்கத்தில போன உடன் முட்டி விடுமோ...? என்கிற பயம் இருந்தாலும்... படம் எடுக்கிற ஆசை வேறு!தமிழ்வாசி..கொஞ்சம் தைரியமாக அப்படியே தடவி கொடுத்தார்…மாடு சும்மா நின்றது அது மிக மிக சாதுவாய் நின்றது….பாவப்பட்ட "ஜீவன்" போல…

'சிபி "கொம்பை" பிடித்து நின்று கொண்டு போஸ் கொடுக்க தமிழ்வாசி…படம் எடுத்தார்' தமிழ்வாசி நிற்க சிபி படம் எடுக்க….'மற்ற நண்பர்களும் ஒரு "அடிமை மாடு" கிடைத்தது என்று வேண்டிய மட்டும் படம் எடுத்துக் கொண்டிருந்தனர்…

அந்த பக்கமாக வந்த உள்ளூர் குடிமகன்(புல் டைட்டுல)மாட்டை என்னவோ செய்யறாங்க என்று…..சண்டைக்கு வந்து விட்டார்.

டேய்ழ்….என்ழ்டா மாழ்ட்ட பன்ழ்றிங்க….என்று "உகாண்டா" மொழி போல தமிழ் கதைத்தார்,

படம் எடுத்தோம்ங்க….நண்பரே..என்றார் சிவா..

என்ழது மாட்டு பழ்ல எடுத்திங்களா?..

பல்லு இல்லைங்க…!படம்…போட்டா…பிக்சர்....இமேஜ்..ஹிஹி என்று கண்டபடி பயத்தில் உளறினார்.. நக்ஸ்,

குடிமகனுக்கு வணக்கம்..! பதிவர்களுக்கு சுணக்கம்….என்று பிரபா அவனை கிண்டல் செய்தார்……

ஏழ்ய்…..தம்பி நாழ்ன் சண்டியர்ழ்ல…என்ற படி முதுகின் பின் இருந்த அருவாளை எடுத்தான் குடிமகன்….அனைவரும் டர்ர்ர்ராக நின்றார்கள்…...

அப்பொழுது ஒரு கார் வந்து நின்றது!
அதிலிருந்து இறங்கினார்கள் 'மனோ அன்ட் விக்கி…'யேய்... மக்கா என்னலே! இது இப்படி நிக்கீங்க…என்றபடி குடிமகனை பார்த்தார்,

 'எலேய் யாருலே..நீ…அருவாளோட…'என்றார்

'ஆமா..!இவர் மட்டும்தான் அருவா வச்சிருக்கனும் ..என்றார் விக்கி!'

'யேய்..மூதேவி...சும்மா இருடா என்றார் மனோ'

கண்ணாடி சகிதம் விஜயகாந்த் கணக்கா நின்ற இருவரையும் பார்த்து கொஞ்சம் குடீஸ் அரண்டுதான் போனது…

சார்...! நீழ்க யாழ்ரு….? என்று மனோவை கேட்டது குடி.

'நாங்க பதிவர்கள்…மக்கா...' என்றார்..

குடிமகன் டவுசர்க்கு மேல் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து கீழே இறக்கி விட்டு "அருவாளை" மனோ காலடியில் போட்டு விட்டு நெடுஞ்சான் கிடையாக விழுந்தது…!

'அய்யா நீங்க எல்லாம் பத்திர ஆபிஸர்களா(நிலபதிவு அதிகாரிகள்)' புறம்போக்குல குடிசை போட்டது தப்புதாங்கையா…..மன்னிச்சிருங்க என்று அழுதது....

அட "கோட்டி" பயலே….என்ற மனோ அவனை சமாதனப்படுத்தி, ஸ்டேன்டில்(முதுகில்) அருவாளை சொருகி அனுப்பி வைத்தார்…

விக்கி பிராப்ல பதிவருக…இன்னிக்கு பத்திர பதிவர்களாகிட்டாங்க..ஹே..ஹே….என்று சிரித்தார்…

வாங்கங்யா..வியட்நாம் வீரர்...! நாங்க பிராப்ல பதிவர்ன்னா... நீங்க தாப்பாள் பதிவரா என்றார் பிரபா...கடுப்பாக

'அவரு உள்குத்து பதிவர்..! இது நக்ஸ்'

'யோவ்…இப்ப எல்லாம் வெளிகுத்தாவே போடுறாருய்யா…'என்றார் சிவா!

'அடங்கோ…! விட்டிருந்தா குடிமகன் முதுகில கையெழுத்து போட்டிருப்பான் நாங்க வரலைன்னா…பேசுதுக…'

விடுங்கய்யா விடுங்கய்யா இங்கேயும் வந்து ஆரம்பிச்சிட்டிங்களா? என்ற. சிபி விக்கியிடம் தான் எடுத்த படங்களைக் காண்பித்தார்…அட…மாட்டை இப்படியும் அடக்கலாமா? பாவம் சும்மா தேமேன்னு நிக்கிற மாட்டை அடக்கற மாதிரி படம் எடுத்து பிலிம் காட்டுதுக பயபுள்ளைக…என்று நக்கல் அடிக்க…

நீ…திருந்தவே..மாட்டியா….என்று விக்கியை அடிக்க ஓங்க…விக்கி விலகி ஓட
மனோ…!எலேய் தக்காளி ஏண்டா அடிச்சுக்கிறீங்க….என்று கேட்க…விக்கி சொல்ல...

மனோ காளையா...பசுவா... எனக் கீழே குனிந்து மாட்டைப் பார்த்துவிட்டு… அடப்பாவிகளா பசு மாடுடா இது….அதான் தேமேன்னு நின்றிருந்திருக்கு…பசு மாட்டை அடக்கி "பல்பு" வாங்கிய பதிவர்ன்னு எவனாவது பதிவு போடப்போறான் பாருங்க….என்றார் மனோ'

'டேய் அண்ணா சிபி அதோ..! அந்த மாட்டு கொம்பை புடிங்க... படம் எடுக்கலாம் என்று ஒரு மாட்டை காட்டினார்….'



"சிபி" திரும்பி பார்த்தார்...அது பெரிய திமில்களோடு, தன் கொம்புகளால் மண்ணைக் கின்டிக் கொண்டிருந்த்து, இரண்டு சங்கிலியினால் கட்டப் பட்டிருந்த்து…,

'ஆளை விடுங்கப்பா சாமி' என்று சிபி கையை தூக்கி கும்பிடு போட...மைக்கில் கூறிக்கொண்டு இருந்தார்கள் மாடுபிடி விளையாட்டு இன்னும் சிறிதுநேரத்தில் ஆரம்பிக்கப் படுவதாய்..... 

நண்பர்கள் அனைவரும் ஜல்லிகட்டு நடக்கும் இடத்தினை நோக்கிப்  போனார்கள்…மீதியை தமிழ்வாசி ஃபிளாக்குல போடுவாரு படிச்சுக்குங்க….

கொம்பு :  எவனாவது பதிவர் என்று குறிப்பிட்ட இடத்தில் வரும் பதிவர் நான் தாங்க…!

சாட்டை : இதில் எந்த விதமான உள்குத்து சமாச்சாரம் கிடையாது சும்மா ஜாலியா எழுதினது….பொங்குறவங்க….பொங்கிக்குங்க ஜாலியா


21 comments:

Unknown 7:00:00 PM  

என்னத்த பொங்குறது அதான் பொங்கி கெடக்கே ஹிஹி!..இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!

தமிழ்வாசி பிரகாஷ் 7:04:00 PM  

ஹா...ஹா... சுரேசு உமக்கு குசும்பு ஒவரா...'

நீர் மட்டும் எஸ்கேப் ஆகிட்டிங்க.....

Unknown 7:06:00 PM  

மாமாமாமாமாமாமாமாமா......(இதுக்கு அர்த்தம் :எங்க மாம்ஸ் உங்களுக்கும் மாட்டு பொங்கல் வாழத்துகள்!)

Unknown 7:07:00 PM  

ஹலோ!எவனாவது பதிவர்..நான்தானுங்க......!

தமிழ்வாசி பிரகாஷ் 7:46:00 PM  

ஒரு விளம்பரம் தான்..ஹி..ஹி...

ஜல்லிக்கட்டு வீடியோ பாக்க வாங்க மக்காஸ்.....

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு

MaduraiGovindaraj 7:55:00 PM  

ம்ம்ம் நடத்துங்க

பால கணேஷ் 8:53:00 PM  

ஆஹா... கௌம்பிட்டாங்கய்யா வீர சிங்கங்க... கௌம்பிட்டாங்க. கணேஷ்... ஓடிடுறா... ஓடிடு...

கவிதை வீதி... // சௌந்தர் // 9:47:00 PM  

சூப்பர்...

ஆனா நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை...

நமதெல்லாம் பெரிய ரேஞ்சு...

டைனோசர், காட்சில்லா இப்படி அடக்கியே பழகிபோச்சி....

Unknown 10:36:00 PM  

நன்றிங்க கோவிந்தராஜ்...அடுத்தது பாலமேடு கிளம்பிட்டிங்களா?

Unknown 10:37:00 PM  

என்ன..கணேஷ் சார் படத்தை மாத்திட்டிங்க...

Unknown 10:39:00 PM  

என்னங்க தலை..காண்டா மிருகம் ஒர்த் ஆகுமா..?பாருங்க பிளீஸ்..ஸ்பீல்டுபெர்க் வேற பொங்கல் லீவுக்கு போய்ட்டாரு..ஹிஹி

Unknown 10:40:00 PM  

நன்றிங்க..அய்யா....பொங்கல் வாழ்த்துகள்!

அனுஷ்யா 11:35:00 PM  

நீங்க பக்கத்துல இருந்து எடுத்த போட்டோ எல்லாமே சூப்பர் நண்பா...எம்புட்டு தைரியம் உங்களுக்கு? ஹி ஹி..

Avani Shiva 12:51:00 AM  

போன வருஷத்த விட இந்த வருஷம் கொஞ்சம் "மாடு" கம்மித் தான் , ஆனா நக்கல் கலக்கல் ,நாங்களும் அவனியாபுரம் தான்.அவனி சிவா பேரே சொல்லுதா

Sivakumar 2:15:00 AM  

நான் கீழ விழும்போது பிரபாகர் இப்படி கவிதை சொன்னா என் பதில் அதே மாதிரிதான் இருக்கும். :)

Sivakumar 2:18:00 AM  

நக்ஸ் காளையை அடக்குவாரா? கன்னுக்குட்டிய பாத்தாலே பம்முவாறு..

நிரூபன் 3:33:00 AM  

வணக்கம் நண்பா,
நாய் நக்ஸ், மனோ அண்ணர், சிபி அண்ணர், பிலாசபி பிரபா, விக்கி அண்ணர், பிரகாஷ் எல்லோரையும் வைத்து செமையாத் தான் கலாய்ச்சிருக்கிறீங்க.

அதுவும் உகண்டா மொழியில வாங்கிய பேச்சு இருக்கே...சூப்பர் டைம்மிங்க்
அப்புறமா சிபியும், தமிழ்வாசியும் கூட்டு சேர்ந்து ஓய்வாக தூங்கிட்டு இருக்கிற மாடை அடக்கியது மகா காமெடி.

ரசித்தேன் ஐயா.

வயிறு குலுங்க சிரிச்சு வைச்சிருக்கிறீங்க.

கும்மாச்சி 5:38:00 AM  

ஹலோ இங்கே என்ன நடக்குது, அவனியாபுரமா அப்படின்னா?

MaduraiGovindaraj 5:54:00 PM  

மீதிய காணோம் (தமில்வாசியில் தொடரும்?)

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP