அவன் இவன் திரைவிமர்சனம்

>> Monday, June 20, 2011

அவன் இவன்                                                                                                                  






சிரிப்பு 
 மணிரத்தினம் படத்தில் மழை கொட்டிக்கொண்டே இருக்கும், அடிக்குரலில் பேசுவார்கள், 90௦ சதவீதம் காட்சிகள் இருட்டில் இருக்கும், இது அவரின் பார்முலா அதை போன்றே பாலா ஒரு பார்முலா வைத்து இருக்கின்றார் ஒரு கேரக்டரை மனதில் நிற்க்கும்மாறு செய்து அந்த கேரக்டரை சாகடித்து விடுவார் சாகடிப்பதுற்க்கு ஒரு கொடூர வில்லன் அந்த வில்லனை கொல்லும் ஹீரோ இது தான் பார்முலா அதே பார்முலா தான் இந்த படமும் G.M.குமார் வெயில் திரைப்படத்தில் கொடுமை அப்பாவாக வந்தவர் காமடி செய்கின்றார் படத்தின் கிளைமாக்ஸ் வரை காமடி அதகளம்தான் பின்பு பரிதாபமாக செத்து போகின்றார்


அம்பிகா பீடி குடிக்கின்றார் "எப்ப பாரு திங்க பேழ" "வந்தவங்களுக்கு ரொட்டியா சுட்டு போடமுடியும் அத" என பக்கா  லோக்கலா பேசுகின்றார் போலிஸ்காரங்கள இந்த அளவு எந்த படத்திலும் கேவலபடுத்த முடியாது திருடக்கூடாது என கிடா வெட்டி விருந்து வைக்கின்றார் ஒரு இன்ஸ்பெக்டர் விருந்து சாப்பிட வந்த இடத்தில வாக்கி டாக்கியை ஆட்டையை போடுகின்றார் ஆர்யா 

ஆர்யா ஒரு கண்ணை மட்டும் நகர்த்தி மாறுகண் உடையவராக மிகவும் சிரமப்பட்டு நடித்து உள்ளார் ஆனால் காமடி அவ்வளவாக இல்லை அனந்து  சார் விஜய் டிவில சின்ன சின்ன குழந்தைகளை அழகா பாட வைக்கறீங்க உங்க மேல எவ்வளவு மதிப்பு வச்சு இருப்பாங்க அம்பிகாவும் ஜெயப்ரதாவும் கெட்ட வார்த்தைல உங்கள திட்டறாங்க விசால் ரொம்ப கேவலமான கெட்ட வார்த்தைல திட்டுறார் மனசுக்கு கஷ்டமா இருக்கு என்ன பண்றது கேட்டா நடிப்புங்குவீங்க 

சூர்யா வரும் கட்சியில் அவரையே ஆர்யா ஓட்டுவது நல்ல காமடி "அண்ணதம்பியும் கோடி கோடியா சம்பாரிக்கரீங்க கொடுத்தா என்ன? என்கின்றார் ஒரு பெரியவர் சூர்யாவை புகழ்ந்து பேசும்போது தாத்தா கேரக்டருக்கு கிழவ அடி போடுறா பாரு! என கலாய்கின்றார் சூப்பர்

ஆச்சர்யம் 
விசால் கண்ணை சிரமப்பட்டு நடித்து இருக்கின்றார் அதில் சூர்யா வரும் காட்சியில் நவரசத்தையும் காட்டும்போது உழைத்து இருக்கின்றார் வெல்டன் விசால் 

கோபம் 
G.M.குமார் வில்லனால் நிர்வாணமாக கொட்டும் மழையில் நிற்க வைத்து சாட்டையால் அடிக்கும் காட்சியில் படம் பார்க்கும் அனைவரும் உறைய வைக்கின்றது வில்லன் மேல் கோபம் கொண்ட ஆர்யா அடிவாங்கிக்கொண்டு திரும்பி வந்து பிணத்தின் முன் ஆடி கொண்டு போகின்றார் விசால் சென்று வில்லனை தும்சம் செய்கின்றார் கட்சிகள் கோர்வையாக இல்லை அதனால் மனதில் நிற்க வில்லை

வெக்கம் 
விசால் பெண் தன்மையோடு வருகின்றார் அரவாணி போன்று பெண் வேடத்தில் டான்ஸ் ஆடுகின்றார் திருட போகின்றார் பேசுவதும் ஒரு மாதிரி ஆனாலும் பெண் போலீஸ்காரியை காதல் செய்வது ஒட்டவில்லை

வக்கிரம் 
க.ம. குமாரை நிர்வானமாய் மரத்தில் தொங்க விடும் காட்சி மிக கொடுமை அந்த இடத்தில் விசால் இயல்பாய் நடித்து உள்ளார் பாலா படத்தின் டச் அந்த காட்சியில் இருந்து ஆரம்பம் ஆகின்றது 

உக்கிரம் 
கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனை கை கால்களை உடைத்து போடுகின்றார் விசால் வலி தாங்க முடியலை என்னை கொன்னு போடு என கெஞ்சுகின்றார் வில்லன்,ஆனால் விசால்  க.ம.குமார் பிணத்தை எரிக்கும் போது அதன் அடியில் உயிருடன் வில்லனை வைத்து சனி பொணம் தனியா போகக் கூடாது உனக்கு துணை அனுப்பிச்சுருக்கேன் என்று கதறும் காட்சி

அழுகை 
நடிகர் சூர்யா வின் முன் விசால் நடிக்க ஆசைபடுகின்றார் நடித்து சொதப்புகின்றார் பின் ஒவ்வொரு பாவங்களை காட்டுகின்றார் கடைசியில் துக்கம் என்கின்ற பாவத்தில் அழும் போது அனைவரையும் அழ வைக்கின்றார் விசால் படம் பார்ப்பவரையும்தான்! படத்தில் ஏகப்பட்ட குறை இருந்தாலும் ஒரு சில கட்சிகளுக்காக பாலாவின் உழைப்புக்காக விசாலின் முயற்சிக்காக பார்க்கலாம் தவறில்லை விசாலுக்கு விருது காத்திருக்கின்றது கிடைக்க வாழ்த்துவோம்   
  

1 comments:

கோவை நேரம் 2:19:00 PM  

விமர்சனம்...நன்று மாம்ஸ்...தனி தனி விளக்கமாய்...

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP